54 அந்த விடியல் வேளையும் பிறந்தது. அன்பிற்கினிய கர்த்தர் பிரான் மேலானவர்-குறிக் கோள் மிக்க என்னுடைய புனிதமான கனவு பலனும் பலமும் அடைந்திட, என் மனத்தைப் பக்குவப்படுத்தி, நல்ல பாதையைக் காட்டிவிட்டார்!- கடையரினும் கடை யருக்குரிய அன்புப் பணியைத் தொடங்குவதற்கான .புதிய வாழ்க்கைத் தொழிலின் புதிய பயணத்தை மேற் கொள்ளுவதற்கு நேரமும் காலமும் கூடிவிட்டன. தெரேசா, தமது. உள்ளத்தில் உள் ஒளி ஏற்பட ஏதுவாக அமைந்த அந்த 1945 செப்டம்பர் 10ஆம் நாளான அகத்துரண்டுதல்’ நன்ேைள (inspiration Day) ஒரு போதும் மறவார்! கன்னிகை தெரேசாவின் அழகான அன்பு வதனத்தில் மெய்யான களை தென்பட்டது. தெரேசா, புதிதான ஊக்கத்துடன் தென்பட்டார்; அன்புப் பணிக்கான இலட்சி யத்தை நடைமுறைப் படுத்துவதில், அவரது சிந்தனைகள் து.ாண்டுதல் பெற்று இயங்கவும் தலைப்பட்டன; 10, செப்டம்பர், 1946: தன்னுள்ளே ஒர் உள்ளொளியைக் காட்டி, பிறந்த மண்ணில் முன்னர் விடுத்த முதல் ஆணையையடுத்து, இப்போது இங்கே இரண்டாவது ஆணையையும் பிறப்பித் துள்ள பரமபிதாவின் நல் இரக்கத்தை மேலும் உணர்ந் தறிய ஏதுவான சுபதினமாகவே அந்நாளை மதிப்பிட் டார்!- அன்புக்கு அடைக்கும் தாழ் போடப்படுவதை ஏற்க மறுக்கவும், கன்னியர் மடங்களினின்றும் விடுதலை அடைந்து பிரிந்து வெளியேறவும் தேவைப்பட்ட தன்னம்பிக்கைத் துணிச்சலைத் தன்னுள்ளே உண்டாக்கிய புரட்சி நாளாகவும் அந்நாளைக் கருதினர். நகரின் எட்டுத் திசைகளிலும் சிதறியும் பதறியும் சின்ன பின்னமடைந்து கிடத்த சேரிப்புறங்களிலே காலடி எடுத்து வைத்து, தன் அன்புத் தவத்திற்குச் செயல்வடிவு கொடுத்து, தான் ஒருத்தியாக அன்பிற்குத் தூது செல்லக்கூடிய புத்தம்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை