67 பள்ளி ஆசிரியை தெரேசாவுக்குப் பள்ளிப் பிள்ளை களின் படிப்பார்வத்தைக் காணக் காண மகிழ்வு மேலிட்டதில் வியப்பு இல்லைதான். மகிழ்வின் கூடுதலில், அன்புப் பணிக்கான புத்தெழுச்சியும் கூடுதல் அடைத் திருக்கக் கூடும். காலத்திற்கு நிற்கவோ, நிலைக்கவோ பிடிக்காதுதான். தெரேசாவும் அப்படித்தான் - பள்ளி நேரம் ஆரம்பமாவதற்கு முன்பும், பள்ளி நாழி முடிந்ததற்குப் பின்பும், ஆசிரியையான தெரேசா, தீண்டாமையை விலக்கிவைத்த சேரிகளின் பிள்ளைகளுக்கு அன்னேயான தெரேசாவாக ஆவார்; பூதானத் தந்தை பாதயாத்திரை செய்ததுமாதிரி, அன்புத் தாய், சேரி ஒன்றையும் பாக்கிவைக்காமல், அன்பிற்காகவும், அன்பைத் தேடியும் அலேந்தார்; திரிந்தார்; சுற்றினர்; சுழன்ருர், சேரி மக்கள் ஒவ்வொருவரையும் நேருக்கு நேர் கண்டு பேசி, நலம் விசாரித்தார். ஆண்டவனை நம்பி, ஆறுதல் கூறிஞர்: தேறுதல் சொன்னர்; நம்பிக்கை அளித்தார்! அடுத்த நாள், விடிந்தது. 1949, மார்ச், 19 காலப் பிரார்த்தனையில், தெரேசா ஒன்றுபட்ட பக்தியின் உணர்வுகளோடு மனம் லயித்து ஒன்றியிருந்தார். "கர்த்தர் பிரானே! மரம் வைத்தவர் நீங்கள்; தண்ணிர் - ஊற்றுகிறீர்கள்; உங்கள் அனுக்கிரகத்தால் அந்த நீரைப் புல்லுக்கும் பொசியச் செய்கிறேன்; நான் மேற்கொண் டிருக்கும் அன்புச் சேவை என்னுடைய லட்சியக் கனவுக் கேற்ப இயங்கத் தேவைப்படுகிற உதவியையும் துணை யையும் அருளி, எனது மக்கள் நலப் பணிகள் சிறக்கவும் நிறக்கவும் செய்து, என்னைப் பிறர்க்குப் பயன்பட வாழச் செய்யுங்கள், தந்தைத் தெய்வமே!’ புனிதச் சிலுவை, மெய் வழியில், மென்மையாகவே புன்னகையைச் சிந்துகிறது.
பக்கம்:அன்னை தெரேசா.pdf/67
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை