69 உன்னதமான அன்பிற்கு உள்ள ம் நிறைந்த பணிப் பெண்ணுக உருக்கொண்டு, உருவெடுத்த தெரேசா, உந்திக்கமலத்தினின்றும் புறப்பட்ட முறுவல் கோபத் தோடு, உரையாடிஞர். என்னிடம் படித்தகாலத்தில் சிறுமியாக இருந்தவள் இப்போது வளர்ந்திருக்கிருள்!" பழைய மாணவியைப் பற்றின புதிய தகவல்களையும் கேட்கலாஞர். ஒரு தீர்மானத் துடிப்போடும் ஆர்வத் துள்ளலோடும் குமாரி சுபாஷிணிதாஸ் தெரியப்படுத்திய நற்சேதியைக் கேட்டது தான் தாமதம்; அவரது நெஞ்சில் ஏசுவின் நற்கருணைச் சிரிப்புத்தான் பளிச்சிட்டது; சிலிர்த் தார். அப்படியா? மிக மிக மகிழ்கிறேன்; நான் தன்னந் தனியளாகவும் ஒரே ஒருத்தியாகவும் மேற்கொண்டிருக்கும் அன்பின் தூதுக்கு எனக்குத் துணை நிற்கக் கர்த்தர்தான் உன்னே இப்போது என்னிடம் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆமாம், சுபாஷிணி! என்னுடைய குறிக் கோளுக்கு ஏற்ப, ஒரு இயக்கமாகவே உருவாக்கத் திட்ட மிட்டு வரும் எனது அன்புப் பணி நடவடிக்கைகளுக்கு எனது முந்திய மாணவியான நீயே முதல் துணையாகக் கிட்டியதில், நான் சொந்தமாகவும் பெரிதும் ஆனந்த மடைவேன்!” குமாரி சுபாஷிணி தாஸ், தன் தலைவியின் இயற் பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டு, புனிதச் சகோதரி ஆக்னெஸ் ஆளுள்! - அன்பின் தலைமகள் பால் இந்தச் செல்வமகள் கொண்டிருந்த பாசமும் பக்தியும் அப்போது அவள் விழிகளிலும் இதழ்களிலும் ஒளி ஆடியது; அந்தப் பரிசுத்த ஒளியில், தான் என்றென்றைக்குமே அன்னையின் முதல் துணையாகவே அமைந்துவிட வேண்டுமென்ற கனவு நிழல் ஆடியிருக்குமோ? -- - - * : . . . உள்ளார்ந்த நாணயக் கனவுகள் பலிப்பது விலக்குவிதி அல்லதான்; விதியை விலக்கி வைத்த விதி ஆகும்! - வரலாறு, இந்நியதிக்கு மெய்ச்சாட்சி சொல்லவும் சொல்லுகிறது. சொல்லும்;
பக்கம்:அன்னை தெரேசா.pdf/69
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை