77 சோதிக்கும் உயிர்களைச் சோதித்து, அந்த உயிர்களே மரணத்தின் விதியினின்றும் கட்டிக் காக்கச் சகல விதமான மருத்துவ நடவடிக்கைகளையும் மருத்துவ விஞ்ஞானத்தின் பேரிலும், அன்பின் தார்மிக அடிப்படையிலும் மேற் கொள்ளக் கடமைப்பட்ட மருத்துவக் கூடம் அது. அங்கே காற்றினும் கடிது விரைந்தார் கன்னித் தாயார். நிலவரத்தை விவரமாகவே விளம்பினர். கையோடு உடன் எடுத்துச் சென்ற அந்த அனுதைப் பெண் பிண்டம், மூச்சுப் பேச்சின்றிக் கிடக்கிறது, பரிசோதனை நடக்கிறது. கைவிரிப்பு. ஜீவ மரணப் போராட்டத்தில் லயித் திருந்த அந்த அபலைக்கு உயிர் காக்கும் எந்த உதவியையும் செய்ய முடியாதாம்!-அந்தப் பெண் ஜீவன் செத்துக் கொண்டி ருந்ததாம்! மருத்துவமனை விதியெனத் தீர்ப்பை வழங்கிவிட்டது: 'இந்தப் பெண் உயிர் பிழைக்க மாட்டாள்!” அன்னே துடித்தார். அந்த அனதைக்குத் துடிப்பே இல்லை. ஆலுைம், அன்னையின் துடிதுடிப்பு மிஞ்சியது. இந்த ஏழைப் பெண்ணை ஆஸ்பத்திரியில் அனுமதித்தாலன்றி, நான் உங்கள் ஆஸ்பத்திரியைவிட்டு நகரவே மாட்டேன்!” என்று தலைமை மருத்துவ அதிகாரியிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். - விதிக்கு மருந்து ஏது? அ ன் னை யி ன் வைராக்கியமான நடவடிக்கையின் பேரில், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓர்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/77
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை