பக்கம்:அன்னை தெரேசா.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அன்னை தெரேசா

அன்பின் வெற்றிக்கு நோபல் பரிசில்

அலகிலா விளையாட்டுடைய - அன்பே வடிவமைந்த கண்டவன் படைத்தளித்த உலகத்தின் வரலாற்றிலகளால் நாளும் பொழுதும் பெருமையோடு பேசப்பட்டு கின்ற அன்பின் தெய்விகச் சக்தியை மேலும் உணரவும், உண்ாந்து பாராட்டவும், பாராட்டி மகிழவும் வாய்த் திட்ட பொன்னை நல்வாய்ப்பாக, அன்பின் வெற்றிக்கு உலக அரங்கத்திலே மகத்தானதொரு மரியாதை வழங்கப்பட்டது!

அந்த நாள் : 17-10-1979. தேதி9ஆம் ஆண்டிற்குரிய உலக அமைதி மற்றும் இணக்திற்கான நோபல் பரிசுக்கு (Nobel Peace Size) அன்னையென்று உலக மக்களால் அன்போடும் இாசத்தோடும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போற்றப்பட்டு வருகின்ற அன்னே தெரேசா அவர்கள் ".her Teresa) உரியவராக அறிவிக்கப்பட்ட புனிதமானனுள் அல்லவா அது!

உலகத்தின் அன்புக்கும் புகழ்ச்சிக்கும் உரித்தானதாக மைந்த தூய நினைவு நாளாகவும் அது அமைகிறது அன்பின் அற்புதச் சக்திக்கு 'உலகத்தின் ஆடுகளத்தில் உள்ள சாட்சியாக விளங்கி, பக்திக்கும் நம்பிக்கைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/8&oldid=1672685" இலிருந்து மீள்விக்கப்பட்டது