99 குழந்தைகள் என்னும் பாவப்பட்ட எண்ணம் நிழலாடாத வண்ணம், அக்குழந்தைகள் முறைப்படி பராமரிக்கப் படுகின்றன. அன்னை தெரேசாவின் அறநெறி சார்ந்த அன்புப் பணி அமைப்பில் பங்கேற்றுப் பணி புரியும் கன்னித் துறவுச் சகோதரிகளுக்கும் உடன் உழைப்புச் சகோதரர்களுக்கும் இறையவனுக்குத் தங்களே முழுமையாக அர்ப்பணித்தல், அன்பு செய்தல் மற்றும் மகிழ்ச்சியுடன் இருந்து, மகிழ்ச்சி யுடன் பணி புரிதல் ஆகிய குறிக்கோட் சிறப்பு வாய்ந்த மூன்று புனிதச் செயல் முறைகளிலும் தகுந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இயேசு பிர்ான் போதனை செய்த வாறு, இந்தப் பூலோகத்திலே கடையரினும் கடையருக்குத் தெய்வத் தந்தையின் கட்டளைப்படி கருணைத் தொண்டுகள் ஆற்றிவரும் அன்னையின் அன்புப் பணி முறைமைகளுக்கு மேற்கண்ட பயிற்சிகள் பெரிதும் துணைபுரிகின்றன. “-syair Geir gifgastřeseir” (Missionaries of Charity) என்னும் பொதுநலப் பணி அமைப்பின் சார்பிலும் தொடர்பிலும் அன்னே தெரேசா நடத்திவந்த இறப்போர் நல இல்லத்தையடுத்துத் திறக்கப்பட்ட நிர்மல் சிசுபவன்' எனப்பட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு உள்ளமும் உருவமும் கொடுத்த குழந்தைகள் தேடிக் கிடைத்த விதத்தையும் தேடாமல் கிடைத்த நட்பையும் புகழ், வாய்ந்த பத்திரிகையாளர் மால்கம் மகரிட்ஜ் (Malcolm Muggeridge) கேட்ட கேள்வி ஒன்றிற்கு விடையளிக்கும் முறையில், இவ்வாறு முறையாகவும் முறைப்படுத்தியும் சொன்னர்: ' எங்களுடைய குழந்தைகள் இல்லத்திலுள்ள குழந்தைகளில் பெரும்பாலானவை அவரவர்களின் பெற்ருேர்களால் வேண்டப்படாத குழந்தைகளாகவே இருக்கின்றன. சில குழந்தைகளை நாங்கள் நடுத்தெருக் களில் கண்டெடுக்கின்ருேம்; சிறைச்சாலையிலிருந்து சில வற்றைப் பெறுகிருேம்; காவல் துறையினராலும், தாய்சேய் நல மருத்துவமனைப் பிரிவினராலும் குழந்தைகள்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/99
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை