146
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
அடி அறிவுறுதல் அஞ்சி, பைப்பயக் கடி இலம் புகூஉம் கள்வன் போலச், சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு ஆவது ஆக இனி நாண் உண்டோ? வருகதில் அம்ம, எம் சேரி சேர! அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காணத், தாரும் தானையும் பற்றி, ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போலத், தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து அவன் மார்பு கடி கொள்ளேன் ஆயின், ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல் பரந்து வெளிப்பிடாது ஆகி, வருந்துகதில்லயாய் ஒம்பிய நலனே! - பரணர் அக 276 நீண்ட பெரிய நீர்நிலையில் இரை தேடுதலை விரும்பிப் புறப்பட்ட் வாளையான ஆண் மீனைப் பிடித்துத் தின்பதற்கு நாரையானது தன் காலின் ஒலியை அந்த மீன் அறிந்து கொள்ளலை அஞ்சி, மெல்ல மெல்ல, காவல் மிக்க வீட்டில் புகும் கள்வனைப் போன்று தளர்ந்து நடக்கும். இத்தகைய இடமான துறை பொருந்திய ஊரனால் நமக்கு உண்டாகும் பழி உண்டாகுக. இனிமேல் நமக்கு நாணம் என்பதும் உண்டோ?
அவன் நம் சேரியில் பொருந்த வருவானாகுக. செவ் வரி பொருந்திய மை பூசப்பெற்ற கண்களைக் கொண்ட அவனுடைய பெண்டிர் காண, அவனின் மாலையையும் ஆடையையும் பிடித்துக் கொண்டு, ஆரியர் பழக்கி வைத் துள்ள பெண் யானை கொணரும் ஆண் யானையைப் பேரல் என் தோள் கட்டுத்தறியாக என் கூந்தலான கயிற்றால் கட்டி என் மார்பான கொட்டிலில் சிறை செய்வேன்.
அப்படிச் செய்யாது போனால், என் தாய் பாதுகாத்து வளர்த்த என் அழகானது பொருளை விரும்பி இரந்து வந்தவர்க்கு ஈயாமல் சேர்த்து வைத்தவனது பொருளைப் போல் வெளிப்பட்டுத் துன்பப்பட்டு ஒழிக. இதுவே எனது விருப்பம், என்று தலைவனின் பங்கிருப்பவர் கேட்பத் ‘பரத்தை கூறினாள்.