222
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
கேட்டை விரையல் நீ; மற்று வெகுள்வாய் உரை ஆண்டு இதுவாகும், இன் நகை நல்லாய் பொதுவாக தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஒர் பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில் துனை வரி வண்டின் இனம்.
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ்வழிக் காரிகை நல்லார் நலம் கவர்ந்தது உண்ப போல் ஒராங்கு மூச,
அவருள்
ஒருத்தி, செயல் அமை கோதை நகை; ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப, ஒருத்தி, தெரி முத்தம், சேர்ந்த திலகம், ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க, ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்; ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப, ஒருத்தி புலவியால் புல்லாதிருந்தாள், அலவுற்று வண்டினம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன் தண் தார் அகலம் புகும். ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழிஇ, ஒரு கை முடி தாழ் இருங் கூந்தல் பற்றி, பூ வேய்ந்த கடி கயம் பாயும், அலந்து. ஒருத்தி, கணம்கொண்டு அவைமூச, கை ஆற்றாள், பூண்ட மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஒச்சி வணங்கு காழ் வங்கம் புகும். ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள், பறநதவை மூசக கடிவாள, கடியும இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை. ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக் கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,