பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(156) ||

அப்பாத்துரையம் 1

‘சமற்கிருதம்' எனப்படும் இம்மொழியில் பாரதம், இராமாயணம், பகவத்கீதை, புராணங்கள், ஸ்மிருதிகள், லக்கணங்கள் ஆகியவை நீங்கலாக எல்லா நூல்களும் கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பிந்தியவையே. இவற்றுள்ளும் புத்த சமயத்தவர் எழுதிய புத்தசரிதம் என்ற காப்பியமும் ‘மண்ணியல் சிறுதேர்’ (ம்ருச்சகடிகா) என்ற நாடகமும் மட்டுமே கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை.

திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்று சமணர் கூறுகின் றனர். கி.பி. முதல் நூற்றாண்டென்பதே பலர் முடிபு. இவ்விரண்டுக்கும் அது முற்பட்டதாகவே இருக்க இடமுண்டாயினும், இங்கே பிந்திய முடிபையே நாம் கொள்வோம். சங்கநூல்களில் இதற்கும் முந்திய பகுதிகள் பல. மிகப் பிந்திய பகுதி கி.மு.3ஆம் நூற்றாண்டினது.சைவ வைணவ வேதங்கள் கி.பி.7ஆம் நூற்றாண்டுக்கும் 10ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. சிந்தாமணி, கம்பன், கூத்தர், சேக்கிழார் காலம் 12ஆம் நூற்றாண்டுக்குட்பட்டது.

வடமொழியில் புத்தர் நூல் நீங்கலாக வேத நெறியாளர் ஏற்கத்தக்க முதல் இலக்கிய நூல்கள், காளிதாசன் நூல்களே. வள்ளுவர் காலம் இதற்கு 500 ஆண்டுகள் முற்பட்டது. எனவே, வடமொழி இலக்கியம் எதினின்றும் வள்ளுவரோ, சங்ககாலப் புலவர்கள் எவருமோ கடன்பெற அங்கு இலக்கியம் எதுவுமே இருந்ததில்லை என்று காணலாம்.

இலக்கியம் இல்லாவிட்டாலும்; இதிகாசம், புராணம், இலக்கணம், பழைமை வாய்ந்த வேத மொழியிலுள்ள வேத நூல்கள் ஆகியவை உண்டு. இவற்றுள் வேதங்கள் கால வரையறைப்படுத்தப்பட்டவை யல்லவாயினும் மிகப் பழைமை யானவையே. திருக்குறளுக்கும் அவற்றுக்கும் ஒப்புமை காண எவரும் கனவு கூடக் காணவில்லை. அவை வேறுவேறு இனம், வேறுவேறு உலகம் சார்ந்தவை.

வடமொழி இலக்கியத்திலேயே திருக்குறள் போன்ற முப்பால் நூல் உண்டு. அதுவும் மிகச் சிறந்த ஒரு கவிஞரால் எழுதப்பட்டதே. வள்ளுவர் நூலுக்குப் பொருளாலும், கவிதைச் சிறப்பாலும், கருத்தாலும் மிக நெருங்கிய ஒப்புமை உடைய நூல் இதுவே. திருவள்ளுவர் திருக்குறளுக்கு வடமொழியில் ஒப்புமை