பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

263

எழுத்திலும் நாலு சாதி, எண்ணிலும் நான்கு சாதி என்று சாதி வகுக்கின்றன. இதே முறையில் தமிழ்நாட்டின் “அறிவியல்” முன்னேறினால், கல்லிலும் நாலு சாதி, நீரிலும் நான்கு சாதி, மரங்களிலும் நாலு சாதி ஏற்பட்டிருக்கும்! என்னே நம் நாட்டின் நிலை!

தமிழிலக்கியத்தின் போக்கில் வரவர வளர்ந்து வரும் இன்னொரு வழு வடமொழி மயக்கமும் வடமொழி இலக்கிய மயக்கமும் ஆகும். இம் மயக்கம் தொடங்கிய காலத்தில் வடமொழியில் இலக்கியமே யில்லை. சில புராணக் குப்பைகளே இருந்தன. இம் மயக்கம் முற்ற முற்ற வட மொழி இலக்கியம் வளர்ச்சியடைந்து தமிழர் மதிப்புக்கு இடம் தந்து நின்றது. தமிழில் இலக்கியம் அழிந்து வடமொழியினின்று மொழி பெயர்ப்பை எதிர்பார்க்கும் நிலைமையை அடைந்துவிட்டது. மொழியினும் தமிழ் மொழியில் இலக்கியம் குறைந்தும், புராணம் வரவர மிகுந்தும் வந்தது கவனிக்கத் தக்கது.

-

இன்னும், பழந்தமிழ்க் கொள்கைகளாகிய கற்பு, ஊனு ண்ணாமை, கொல்லாமை முதலிய கருத்துக்கள்

ஆரியர்க்குதவும் வகையில் மாற்றப்பட்டன. ஐவரை மணந்த துரோபதைக்கும், கணவனை விடுத்துச் சந்திரனை நாடிய தாரைக்கும் கற்புண்டென்று வற்புறுத்தப்பட்டது. இன்னும் ஒத்துவாராத கதைகளுக்கு "ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கப்படாது" எனப்பட்டது. வேள்வியில் ஊனுண்ணும் பார்ப்பனர் ஊனுண்ணாதவரே என வற்புறுத்தப்பட்டது. அதனை மக்கள் ஏற்கும் அளவு வலியுறுத்த அவர்களுக்குத் திறமை இல்லாக் குறையினால், பார்ப்பனர் பலர் தமிழ் நாட்டிலும் தமிழர் வாழும் நாட்டிலும் மட்டும் ஊனுண்ணலையும் வேள்வியையும் ஒருங்கே விடுத்தனர்.

இவ்வளவும் படிப்படியாய் வந்த காரணத்தினால்தான், பழந்தமிழ்ப் பண்பு கெடாத சில நூல்களேனும் - தொல்காப்பியம், திருக்குறள், சங்கநூல்கள் முதலியவை கிடைத்துள்ளன.

இச் சில நூல்கள் போகப் பெரும்படியான தமிழ் நூல்கள் இறந்துபட்டன.ஏன்?