பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

79

இடங்களில் ஒவ்வொன்றிலும் தங்கித் தப்பிச் சென்று கொண்டிருந்தான். அந்நண்பர்கள் பிடிபட்டுத் தூக்கிலிடப் பட்டனர்.பாண்டியன் அமைச்சரும் தூக்கிலிடப்பட்டனர்.

பாண்டியன் புதுக்கோட்டை மன்னனை நண்பனென நம்பி அவன் விருந்தினனாய் இருந்தான் விருந்திருக்க உண்ணாத தமிழ் மரபில் வந்த தொண்டைமான், விருந்தினரைத் தன் மாளிகையிலேயே காட்டிக் கொடுத்தான்.

வீரபாண்டியக் கட்டபொம்மன் தன் நாட்டிலேயே தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடப்பட்ட மேடு இன்றும் வீரத் தமிழர் வணங்கும் புகழ் மேடாகியுள்ளது.வீரபாண்டியன் பிறர் தூக்கிலிடக் காத்திராது, தானே சுருக்குக் கயிற்றைத் தன் கழுத்தில் மாட் டிக் கொண்டு, வீர உரையுடனும் புன்முறுவலுடனும் தசையுடல் நீத்து இசையுடல் பெற்றான்.

அவனைத் தூக்கிலிடுமுன் பாளையக்காரர்களெல்லாம் ஆட்டுக் கூட்டங்களாக்கப்பட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சி உட்பட எல்லாக் கோட்டைகளும் தரைமட்டமாக்கப்பட்டன. பாளையத்தலைவர்கள் பாளையக்குடிகள் எல்லாருடைய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் சுதந்தர உரிமை நசுக்கப்பட்டது.

ஆதிக்கப்படைகள் எங்கும் நிறுத்தப்பட்டன. வெள்ளையர் படை உரிமைப்படையாய் இருந்தது. இந்தியப்படை வீரர்கள் வெள்ளையர்கள் கையாட்களாய், கூலிப்படைகளாய், அடிமைப்படைகளாய்த் தலை குனிந்து நின்றார்கள்.

எட்டயபுரத்தாருக்கும் புதுக்கோட்டையரசருக்கும் அடிமைப் பரிசுகள் வழங்கப்பட்டன.

வீரபாண்டியன் தூக்கிலிடப்பட்டது 1799ல். அன்று பதினெட்டாம் நூற்றாண்டின் வீரம் தலைசாய்ந்தது. அன்றுடன் பாஞ்சாலங்குறிச்சிப்போர் புரட்சிப் போராய் மாறிற்று.

புதிய புரட்சி

பிரஞ்சுப் புரட்சியில் பாஸ்டில் சிறை தகர்ந்ததே புரட்சியின் சின்னமாயிற்று. பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சியில் பாளையங்கோட்டைச் சிறை அதே இடம் பெற்றது. மாறு