இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
169
காட்டின் ஒரு புறத்திலெழுந்து மெல்லப் பரவி வரும் காட்டுத் தீக்குக் சூறாவளி கிடைத்தால் கேட்பானேன்? பாஞ்சாலத்தின் நிலை இச்சூறாவளியில் பட்ட தீயாயிற்று.
லாகூர், அமிருதசரசு, கன்சூர், அர்விசாபாது, ஷேக்பாரா, வஜீராபாது, அகல்காரா சங்களா முதலிய எத்தனையோ நகரங்களில் கிளர்ச்சிகளும் பொதுக் கூட்டங்களும் கண்டனத் தீர்மானங்களும் ஏற்பட்டன. லயால்பூர், குஜராத்து மாவட்டங்களில் மக்கள் உணர்ச்சி அணைகடந்த வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடிற்று. சீக்கியர்களின் தாயகமான பாஞ்சாலம், மற்றொரு பாஞ்சாலங்குறிச்சியாயிற்று; மற்றொரு வங்கமாயிற்று.
பஞ்சாபுப் படுகொலை
பாஞ்சால ஆட்சி முதல்வர் மைக்கேல் ஓட்வியரும், படைத் தலைவர் டயர் என்பவரும் இந்தியர் குருதியாறு பெருக்கி அவர்கள் உணர்ச்சிகளைக் காலிலிட்டுத் தேய்த்தழிப்பதென்று திட்டமிட்டனர். ஏப்பிரல் 13இல் ஜாலியன்வாலாபாகு என்ற இடத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியலாரும் அதற்குத் தடையுத்தரவு இட்டிருந்தனர். ஆனால், தடையுத்தரவு பற்றி வேண்டுமென்றே போதிய அறிவிப்புப் பரப்படவில்லை.
கூட்டம் நடக்குமிடம், இரண்டொரு புறத்தில் மட்டும் வழியுடையதாயிருந்தது. அரசியலாருக்கு உள்ளாட்களாயிருந்த சிலர், விடுதலையார்வமுள்ள மக்களனைவரையும் கூடிய மட்டும அந்தப் பெரும்பொறியுள் அடைத்தனர். அதன்பின் யாதொரு சந்தடியுமின்றி வழியடைக்கப்பட்டது. கூட்டம் வளைக்கப் பட்டது. உள்ளே தடியடியும் துப்பாக்கி வேட்டும் கூட்டத்தைச் சின்ன பின்னமாக்கிக் கலைத்தன. ஆனால், மருண்டோடிய ஆடவரும் பெண்டிரும், குழந்தைகளும் முதியவரும் வெளியே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுப் படுகொலை செய்யப் பட்டார்கள். இயந்திர பீரங்கிகள் ஓயாது முழங்கின. மக்கள் வெள்ளம், குருதியில் மிதக்கும் பிண வெள்ளம் ஆயிற்று.
இந்தியாவின் வரலாற்றில், ஜாலியன்வாலாவில் நிகழ்ந்த இப்பஞ்சாபுப் படுகொலை, 1857 ஐக் கூட மறக்கடிக்கத்தக்க கோர