பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(280) ||-

அப்பாத்துரையம் - 12

வடநாட்டுச் சமயச் சார்பான வகுப்பு வாதக் கட்சிகளும் தென்னாட்டில் நிலவினும், அவற்றாற்கூட இந்து முஸ்லிம் வேற்றுமையை வலியுறுத்தி வளர்க்க முடியவில்லை!

சமூக அரசியல் துறைகளில் நேர்மைக்கட்சியும், தன்மான இயக்கமும் தரும் படிப்பினைகளை வட நாட்டுச் சமூக வகுப்பு வாதிகள் கவனித்தல் வேண்டும். சாதி வேறுபாடு எளிதில் சமூகச் சீர்திருத்தவாதிகளால் மட்டும் அகற்றத் தக்கது. ஆனால், அது சமயத் துறையில் வருணாசிரம ஒழுக்கமுறையோடு பிணைக்கப் பட்டுள்ளது. மறைமலையடிகளின் தூய சமய வாதத்தாற்கூட, வருணாசிரம ஒழுக்க முறையைக் கண்டிக்க முடிந்ததே தவிர, அழிக்க முடியவில்லை. வடநாட்டுப் பிரமசமாஜ, ஆரிய சமாஜங்களின் நிலையும் இதுவே. ஆகவே, இடைக்காலச் சாதிபுராண அடிப்படையிலமைந்த போலிச் சமயத்தையும், சாதியையும், அவற்றினடிப்படையிலமைந்த போலி ஒழுக்கக் கருத்துகளையும், மூட நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங் களையும் ஒருங்கே எதிர்த்தாலன்றிப் புதிய சமூகத்தையோ, சமய வலுவையோ அரசியல் மனப்பான்மையையோ உண்டு பண்ண முடியாது. தென்னாட்டு இயக்கங்கள் இந்திய மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தரும் படிப்பினையாகிய அறிவொளி இதுவே.

முன்னணிகளின் முரண்பாடு

தென்னாட்டுச் சமய சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் யாவும் அரசியல் துறையில் பிற்போக்காக நின்றதும், பேரவையின் விடுதலை இயக்கத்தில் முழுதும் கலக்காது ஒதுங்கியிருக்க நேர்ந்ததும் தென்னிந்திய வாழ்வுக்கும், இந்திய மாநில அரசியல் முன்னேற்றத்துக்கும் ஒரு பெரிய அவப்பேறேயாகும். இந்நிலை அரசியல் போட்டிகளால் ஏற்பட்டதே என்பதில் ஐயமில்லை. ஆனால், முழு விடுதலையின்போது தென்னாட்டுச் சமூக முற்போக்குக் கட்சிகளில் ஒன்றின் தலைவராகிய அறிஞர் சி.என். அண்ணாத்துரை, பேரவை இயக்கத்தினருக்கு இவ்வகையில் ஒரு நல்ல சமிக்கை தந்துள்ளார். ஆகஸ்டு 15-ஆந் தேதியை அரசியல் துறை விடுதலை நாளாக ஏற்க அவர் முன் வந்தார். இது உண்மையில் சமூகச் சீர்திருத்த வேலையில் தம்முடன் கைகோத்து உழைக்கும்படி அரசியலில் வேறுபட்ட கட்சியினரை அழைக்கும் அன்பழைப்பேயாகும். இவ்வன்புக் குரலுக்குத் தென்னாட்டுப்