தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
139
ஏற்பட்ட தமிழரசுகளின் அழிவைப் பற்றியும் நமக்குக் கூறுகின்றன. களப்பிரர் படையெழுச்சிக்கு முன் ஆண்டதாகப் பல்சாலை முதுகுடுமியையும்
தலையாலங்கானத்துப்
பாண்டியனையும் மட்டுமே அவை குறிப்பிடுகின்றன.
“தலையாலங் கானத்தில் தன்னொக்கும் இருவேந்தரைக் கொலைவாளில் தலைதுமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும், மாபாரதம் தமிழ்ப்படுத்தும், மதுராபுரிச் சங்கம்வைத்தும், மகாராசரும் சார்வபௌமரும் மகீமண்டலம் காத்திகந்தபின்”
என்று சின்னமனூர்ச் செப்பேடுகளும்,
‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' வேள்விக்குடி என்னும் ஊரைக் கொற்கை கிழான் நற்கொற்றன் என்பானுக்குத் தர, அவன் அதை.
நீடு புக்தி துய்த்த பின்,
அளவரிய அதிராசரை அகல நீக்கி அகலிடத்தைக் “களப்பிரனெனும் கலியரசன் கைக் கொண்டதனை இறக்கிய பின்... “கடுங்கோனெனும் கதிர்வேல் தென்னன்'
என்று வேள்விக்குடிச் செப்பேடுகளும் கூறுகின்றன.
ஆனால், களப்பிரர் வடுக நிலத்திலிருந்து வந்த தமிழினத்த வரே யன்றி அயலினத்தவரோ, அயல் மொழியினரோகூட அல்ல என்பதை இவ்வாதாரங்களின் தொனியே காட்டுகின்றன. அவர்கள் அயல் பண்பும், அயல் சமயமும் குறிக்கப்படுகிறது; அயல் மொழி குறிக்கப்படவில்லை. அயல் சமயம் என்பது சமய நூல்களாலன்றித் தெரியவில்லை. இன்று களப்பிரர் யார் என்று தெரிய வராததும் இதனை வலியுறுத்தும். இங்கிலாந்தில் பண்டை ஆங்கிலோ சாக்ஸனியருடனும்,பிரஞ்சு மக்களுடனும் புடேனியர் கலந்து விட்டதுபோல, அவர்களும் தமிழருடன் இரண்டறக் கலந்துவிட்டனர். அவர்களால் தமிழகத்துக்கு ஏற்பட்ட ஒரே குறை பண்டைத் தமிழர் உயர் நாகரிக மரபும், பண்பாட்டு மரபும் இன்றுவரை முற்றிலும் மீளமுடியாமல் மனம் தடுமாறிப் போனதே யாகும்.