6 அப்பாத்துரையம் - 16
மன்னர் பெயர் முதலியன அதில் உண்டு. போர் உண்டு, மன்னர் பெயர் வரிசை, செயல் வரிசை உண்டு, இதுவே உண்மை வரலாறு என்று கொண்டவர் - சிறப்பாக மாணவர் பலர்!
'தென்னாட்டுப் போர்க்களங்கள்' என்ற இச்சிற்றேடு மூவகைக் குறிக்கோள்களுடன் எழுதப்பட்டுள்ளது. அது தமிழகத்தை மையமாகக் கொண்டு அதன் அரசியல் விரிவாகிய தென்னாட்டிலும், அதனினும் விரிந்த பண்பு விரிவாகிய தமிழுலகம், அதாவது தென் கிழக்காசியாவிலும் கண்ணோட்டம் செலுத்தித் தமிழகத்தேசிய வாழ்வின் உடலும், உயிர் மையமும் காண முயன்றுள்ளது. அந்நாடுகளின் தேசிய, இன உரிமை வரலாறுகளில் வருங்கால வரலாற்றாசிரியர் மிகுதி கவனம் செலுத்தும்படி அது அவர்களைத் தூண்ட முனைந்துள்ளது. இரண்டாவதாக, போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியவை தென்னகத்தைப் பற்றிய அளவில் வெறும் நிகழ்ச்சிகளல்ல. வரலாற்றின் எலும்புருவம் மட்டு மல்ல. அவையே தமிழர் தேசீய வாழ்வின் பல திரும்பு கட்டங்கள், பண்பு மாறுபாட்டுக்கணுக்கள் ஆகும். அத்தேசிய வாழ்வுக்கு உருத்தருபவையும், அதன் வளர்ச்சி தளர்ச்சிகள், உறுதி தளர்வுக் கூறுகளை வகுத்தமைக்கும் ஊழ்க்கூறுகளும் அவையே, ஆகவே கூடிய மட்டும் போர்க்கள வரலாறு தேசிய வரலாற்றின் எலும்புமையமாக, கணுமையங்களாக, திரும்பு கட்டங்களாகவே விளக்கப் பட்டுள்ளன. மூன்றாவதாக, போரும் தேசிய வாழ்வும் கூடநாட்டின் எலும்புக்கூடும், உடலும் மட்டுமே. அவற்றின் உயிர் அதன் தேசியப் பண்பும், அப்பண்பு பகல் உலகுடன் கொண்டுள்ள தொடர்புமேயாகும். நாட்டுக்கு மட்டுமன்றி உலகுக்கே வருங்கால வளர்ச்சிக்குரிய வழியும் திசையும் காட்டுவது இவ்வுயிர்ப் பண்பேயாகும். ஆகவே, நிகழ்ச்சி கடந்து அவற்றின் காரண காரியங்களை ஆராய்வதும், அவற்றை நாடுகடந்து உலகில் கண்டு மதிப்பிட முயலுவதும் தேசிய வரலாற்றாசிரியன் இன்றியமையாக் கடமையாகும். தமிழக வரலாற்றின் உயிர் காண்போர் அவ்வரலாறு உண்மையில் உலகவரலாற்றின் ஓர் உட்கூறே என்பதை நெடுநாள் காணாதிருக்க முடியாது. இன்றைய உலகம், ஓருலகம் ஆக முடியாமல் தடுமாறுகிறது என்றால், இன்றைய இந்திய மாநிலமும் கீழ் திசையும் ஒற்றுமை காண முடியாமல், தற்பண்பு