பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/33

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12 ||- அப்பாத்துரையம் - 16

நாகரிக இனத்தின் உயிர்க்கால்வழியே தமிழ் இனம் என்பர் 'உலக வரலாறு' எழுதிய எச்.ஜி. செல்ஸ் என்பார்.

உள் வளர்ச்சி

மனித இன வரலாறு எங்கும் பொதுவாக வளர்ச்சியையே காட்ட வேண்டும், வளர்ச்சியையே காட்டுகிறது. ஆனால், கீழை உலக வரலாறு பொதுவாகவும், தமிழக வரலாறு சிறப்பாகவும் இதற்கு மாறான போக்கைக் காட்டுகிறது. வாழ்ந்த தமிழகம், உலகாண்ட தமிழகம், உலகின் செல்வம் திறை கொண்ட தமிழகம் படிப்படியாகத் தாழ்வுற்று இன்றைய அவல நிலையை எட்டி யுள்ளது என்பதையே வரலாறு காட்ட வல்லது. ஆனால், இது தமிழகத்தின் வரலாறு மட்டுமல்ல; தமிகத்துடன் ஊடாடிய பண்டைப் பெரு நாகரிக இனங்கள் அனைத்தின் வரலாறுகளும் துவே. உண்மையில் அவ்வினங்களில் பல இன்று தடமற அழிந்துவிட்டன. பண்டை ஃபினீஷியா, கார்தேஜ், ஹிட்டைட் பேரரசு,ஏலம், சுமேர் ஆகியவை இன்று புதை பொருளாராய்ச்சி யால் மட்டுமே அறியப்படவேண்டியவை ஆகியுள்ளன.எகிப்தியர், பாரசீகர், கிரேக்கர், உரோமர் ஆகியோர் தம் நாட்டில் பிற இனங்கள், பிற நாகரிகங்கள், சமயங்கள் வாழவிட்டு தம் புகழை மட்டும் நாகரிக உலகில் தடம் பொறித்துச் சென்றுள்ளனர். சீனரும் தமிழரும் மட்டுமே தம் பண்டைப் புகழைத் தாமே தற்கால உலகிற்கு அளிக்கும் பழமைத் தூதுவராக இன்று தற்கால உலகிலேயே காட்சியளிக்கின்றனர்.

தமிழர் வரலாற்றுக்கும் சீனர் வரலாற்றுக்கும் ஒரு பெரிய வேற்றுமை உண்டு. சீனர் வரலாறு சீனத்தின் பழம்புகழை மட்டுமே காட்டுகின்றது. தற்காலச் சீனம் அழியாது நின்று புதுவாழ்வும் அவாவிநிற்பது உண்மையே. ஆனால், இன்றைய சீனத்தின் புது வாழ்வு இன்றைய உலகத்தின் புதுவாழ்வில் ஒரு பகுதியே. அது தன் பண்டைப்புகழின் புதுமலர்ச்சியாகப் புதிய வளர்ச்சி பெறவில்லை. ஆனால், தமிழக வரலாறு பழம் புகழைமட்டும் காட்டவில்லை; அந்தப் புகழ் படிப்படியாகத் தளர்ந்து அவலநிலையுற்று உலகப் புதுவாழ்வில் புதுப்பங்கு பெறுவதை மட்டும் காட்டவில்லை. பழம்புகழின் தளர்ச்சியுடன்