தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13 15
"இம்மொழிகள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பு புற நானூற்றுச் செய்யுட்கள் தோன்றின என்று அச்செய்யுட்களின் தொன்மையும், அத்தொன்மையின் அளவும் புலப்படுத்தற்கு மாத்திரமே இங்கு இச்செய்தி கூறப்பட்டதாகும்."
ஆசிரியர் இரண்டாவது குறிப்பு நாம் மேலே சுட்டிக்காட்டிய அவர் அடிப்படைக் கருத்தின் விளக்கமேயாகும். இன்று தன்னாட்டவரிடையே தமிழர் அறிவிலும், மலையாளிகள் கலையுணர்விலும், கன்னடியர் பண்பிலும், தெலுங்கர் வீரத்திலும் மேம்பட்டுள்ளனர் என்று எவரும் எளிதில் காணலாம். பண்டைத் தமிழினம் இவ்வெல்லாமொழியினங்களையும் உட்கொண்டிருந்தது போலவே, இவ்வெல்லாத் திறங்களையும் ஒருங்குடன் கொண்டிருந்தது. ஆனால், அதில் மேம்பட்டு முனைப்பாய் இருந்த பண்பு என்று உண்டென்றால், அது வீரப்பண்பே. ஆசிரியர் வையாபுரி இதைத் தெள்ளத்தெளியப் புறநானூற்றிலே காண்கிறார்.
புறநானூற்றில் காணப்படும் வீரத்துக்கு ஓரளவு இணையாகச் சொல்லத்தக்க வெளியுலக இனங்கள் இந்தியாவில் இராசபுத்திர இனமும், ஐரோப்பாவில் வடதிசையில் முன்பு வாழ்ந்த டேனிய வடஜெர்மனிய இனமுமேயாகும். இவ்வீரமரபின் ஒரு சிறு தடத்தைக்கூடத் தற்காலத் தமிழினத்தில் காணமுடிய வில்லையே என்று இராவ்பகதூர் பெரிதும் கவல்கின்றார்.
"நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமக்கு நாட்டுப் பற்று என்பது போய்விட்டது. நாட்டுக்காக உயிர் விடுதல் என்பது பழங்கதையே! வீரம், தீரம் என்பவை எல்லாம் அகராதியில் காணும் சொற்களாய் முடிந்தனவேயன்றி, அவற்றுக்கும் இன்றுள்ள நமது வாழ்க்கைக்கும்யாதொரு தொடர்பும் இல்லாமல் சென்றொழிந்தது. நாடுநலம்பெறவேண்டுமாயின் இந்நல்லுணர்ச்சிகளை நாம் மீண்டும் பெறுதல் வேண்டும். இங்ஙனம் செய்வதற்குப் புறநானூற்றுச் செய்யுட்களைவிட உற்றதுணை நமக்கு வேறுயாதும் இல்லை”
புது மலர்ச்சி
புறநானூறு பற்றி ஆசிரியர் வையஅவர்கள் கொண்டுள்ள கருத்து, அவர் ஆர்வம் ஆகிய இரண்டும் யாவராலும்