பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/38

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13 17

சரிந்ததற்கே பாண்டியர் திரட்டிய இந்தப் பெருஞ்செல்வந்தான் காரணம் என்று அறிகிறோம். பாண்டியப் பேரரசர் காலத்தில் தமிழகத்திலேயே வந்து குவிந்து கிடந்த உலகின் செல்வம், அதற்குக் காரணமான தமிழகத்தின் உலகப் பெருந் தொழில்கள் ஆகிய வற்றைக்கவரவே போர்ச்சுக்கீசியரும் டச்சுக்காரரும், டேனியரும் ஜெர்மானியரும்,பிரஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும், தமிழகத்திலும் தமிழகம் சூழ்ந்த தென்கிழக்காசியாவிலும் வட்டமிடத் தொடங்கினர்.

தமிழருக்கும் கீழ்திசை யுலகுக்கும் வாழ்வளித்த தமிழர் வீரம், வெள்ளையராட்சியின் தொடக்கத்தில் வெள்ளையருக்கே புதிய வாழ்வும் உலக வாணிக, தொழில் தலைமையும், பேரரச வாழ்வும் தந்தது. வீரம் அழியவில்லை; ஆனால், அது அயலாருக்குப் பயன் பட்டது. ஆயினும் வெள்ளையர் ஆட்சியின் பிற்பகுதியில், இதே வீரம் தம் ஆட்சிக்கு ஆபத்தானதென்று கண்டு, வெள்ளையர் அதை அழிக்கமுற்பட்டனர்.ஆனால்,அது அவர்களை யெதிர்த்துப் பாஞ் சாலங்குறிச்சியிலும், வேலூரிலும்,மைசூரிலும் கிளர்ந்தெழுந்தது.

தமிழர் மரபில் பிளவுகள்

பாண்டியப் பேரரசுக் காலத்திலும், வெள்ளையராட்சி யிலும்,புறநானூற்றுக்கால வீரம் மறைந்து விடவில்லை; குறைந்து விடக்கூட இல்லை. ஆனால், அதனால் எதிர்பார்க்கப்படத்தக்க வளம் மட்டும் கிட்டவில்லை. அதுமட்டுமன்று. புறநானூற்றுக் கால வீரம் குன்றாது நின்று நிலவினாலும், புறநானூற்றுக்காலத் தமிழ் இலக்கிய வளம்தான் அதைப் பாடும் தகுதியில் குறைந்து விட்டது என்னல் வேண்டும். 'வெற்றி வேற்கை வீரராமன்' என்று தன்னைக் குறித்துக் கொண்ட அதி வீரராமபாண்டியன் தமிழர் வீரம்பாடவில்லை. நளகதையே பாடினார். அல்லது நீதி நூல்கள், காம நூல்கள், கடவுட் கவிதைகள் இயற்றினான். பாஞ்சாலங் குறிச்சி வீரமரபு புது வீரகாவியம் பாடிற்று. ஆனால், அதில் காவியப் பண்பைவிட வீரப்பண்பே மிகுதி. அதைப் பாடிய மரபு வேறு, இலக்கியப் புலவர் மரபு வேறாக அன்று விளங்கிற்று.

புறநானூற்று வீரம் பொன்றிவிட்டது என்று புலம்பும் வையாபுரியவர்கள் பிறந்த இடத்துக்கருகிலேதான் பாஞ்சாலங்