குமரிக்கண்டம் தோரா. கி.மு.?-5,500)
66
"இந்துமாவாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழைக்கரைமட்டும் பரவியிருந்த ஒரு நிலப்பரப்பாயிருந்தது. கிளேற்றர் இப் பழம் பெருங் கண்டத்தை, அதில் வதிந்திருந்த குரங்கொத்த உயிரி(பிராணி)பற்றி இலெமுரியா (Lemuria) என்றழைக் கின்றார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருக்கக் கூடுமாதலின், மிக முதன்மையானது" என்றார் பேரறிஞர்
எக்கேல்.
ாவை
"ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியா யும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்தது என்றார் அறிஞர் ஓல்டுகாம்.
"காட்டு எலியட்டு என்பவர் எழுதியுள்ள மறைந்த லெமுரியா (Lost Lemuria) என்னும் நூலிலுள்ள நிலப்படத்தி லிருந்து, ஒரு பெரு மலைத்தொடர் மேலைக்கடலில் தொடங்கித் தென்வடலாகக் குமரி முனைக்குத் தென்பாலிருந்த நிலப்பகுதியில் நெடுந்தொலைவு சென்று, பின்பு தென்பா லிருந்த நிலப்பகுதியில் நெடுந்தொலைவு சென்று, பின்பு தென்மேற்காகத் திரும்பி, மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகிறது” என்றார் பேரா. கா.சுப்பிரமணியப் பிள்ளை.
“கடல்நூல் (Oceanography) என்னும் தற்காலக் கலை, ஒரு காலத்தில், தென்அமெரிக்காவினின்று ஆப்பிரிக்காவை யொட்டியும் இந்தியாவை யொட்டியும் ஆத்திரேலியாவரை படர்ந்திருந்ததும், 'காண்டுவானாக் கண்டம்' என்றறியப் பட்டதுமான, ஒரு முழுகிய வியனிலத்தைப்பற்றி, வியக்கத்தக்க வுண்மைகளை அண்மையிற் கண்டுபிடித்திருக்கின்றது" என்பது 29-07-1934-இல் வெளிவந்த இந்தியப் படவிளக்கக் கிழமையிதழ்ச் செய்தியாகும்.