குமரிநாடே நாகரிக மாந்தன் பிறந்தகம் சான்றுகள்
1. நிலத் தொன்மை
6
ஞாலத்தில் மிகமிகப் பழமையான நிலப்பகுதியும், பரவை தோன்று முன்பே நீண்ட காலம் நிலைத்திருந்ததும், குமரிக் கண்டமே, எகிபதிய நாகரிகத்திற்கு முந்தியது குமரிநாகரிகம்.
2. ஞால நடுமை
ஞாலநடுவிடம் நண்ணிலக் கோட்டை (Equator) யடுத்த குமரிக் கண்டமேயன்றி, சமதட்பவெப்ப மண்டலத்ததைச் சார்ந்ததும் நண்ணிலக் கடல் என்று தவறாகப் பெயர் பெற்றுள்ளதுமான இடத்தைச் சேர்ந்ததன்று.
டையின்றி நீண்ட காலமாகக் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்திருந்த இயற்கை மாந்தனின் உடல் முழுதும் போர்த்திருந்த மயிர் கழிவதற்கு, வெப்ப நாடே ஏற்றது.
3. இயற்கை வளம்
இயற்கை விளையுளையே பெரும்பாலும் உண்டு வந்த முதற்கால மாந்தனுக்கேற்ற காயுங் கனியும் கிழங்கும் வித்தும் விலங்கும், பறவையும், மீனும், ஏராளமாய்க் கிடைத்திருக்கக் கூடியது குமரிக் கண்டமே ஆடும், மாடும், ஊனும் பாலுந் தோலும் ஒருங்கே உதவின.
4. உயிர்வாழ்வதற்கு ஏற்பு
நான்காம் மண்டலக் காலத்தில் ஐரோப்பாவிற் படர்ந்த பனிக்கட்டிப் படலம் போன்ற இயற்கைப் பேரிடர்ப்பாடு, குமரிக் கண்டத்தில் நிகழ்ந்ததில்லை.