பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலெமூரியா அல்லது குமரிக்கண்டம்

119

படித்திருக்கிறார்கள். ஆனால் தமிழரைப் போல தமிழை ஆழ ஆராய முடியாது. தமிழ் மிகமிகப் பழமையான மொழி.

இப்பொழுது மாந்தனுடைய வரலாற்றை எடுத்துக் காண்டால், பகுத்தறிவுள்ள மாந்தன் தோன்றினானே அக்காலம் தமிழன் காலத்திலே தான் தொடங்குகின்றது. அவ்வளவு பழமை யான காலம் தமிழர்களுடையது. பலர் இப்பொழுது தமிழில் உள்ள மிகப் பண்டைய நூலாகிய தொல் காப்பியத்தை ஆராய்ந்து அத்துடன் நின்று கொள்கின்றார்கள். தொல் காப்பியத்தின் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு. ஆனால் அதற்கு முந்திப் போக வேண்டும் மாந்தன் தோன்றிய காலத்திற்கு. கி.மு. நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போனால்தான் தமிழனுடைய தோற்றத்தை நாம் அறிய முடியும். அந்த அளவுக்குப் பழமையானது தமிழ்மொழி. அவர்களுக்கு (பரோ, எமனோவிற்கு) இந்த உண்மைகள் தெரியாது. அவர்களுக்கு எடுத்துச் சொல்வாரும் இல்லை. கால்டுவெல் சொன்னது உண்மைதான்; ஆனால் பிற்காலத்திலே அவர்கள் ஆரியத்திற்குச் சிறப்புக் கொடுத்த தினாலும் ஆரியத்தை வைத்து அவர்கள் அடிப்படையாகக் காண முடியாமையினாலுந்தான் எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகள் என்னும் முடிவுக்கு வந்து விட்டார்கள்.

இப்பொழுது, இந்தக் காட்சியளவைக்கு - பழம்பொருள் கலைக்கு - நமக்கு இடமே இல்லை. இக்கால் சில மண்டை யோடுகளைக் கண்டெடுத்துக் கொண்டு சிலர், இதுதான் இக்காலம். அதுதான் அக்காலம் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் எந்தக் காலத்திலும், ஒரு நாகரிக காலத்திலும் கூட முத்திறப்பட்ட ஆட்கள் இருந்தே தீருவார்கள். அவர்கள் தலையாயார், இடையாயார், கடையாயார் எனப்படுவர். இப்பொழுதுள்ள காலத்தை நாகரிகமில்லாத காலமென்று சொல்ல முடியுமா? ஆனால் இன்றும் இந்த ஆனைமலைப் பகுதிகளுக்கு நீங்கள் போனீர்களானால் அங்கு இன்னமும் நாகரிகத்தில் மிகக்குறைந்த காடர்கள் போன்ற மக்கள் இருக்கிறார்கள்.இன்னும் அந்தமான் போன்ற தீவுகளில் இன்னும் நாகரிகமடையாத மக்களும் இருக்கிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு மண்டையோட்டைக் கண்டெடுத்தவுடனே இதுதான் நாகரிக மாந்தனுடையது அல்லது தமிழனுடையது என்கிற