பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலெமூரியா அல்லது குமரிக்கண்டம்

129

நாட்டானாக விருக்கிறபடியால், இந்த நூல் கருத்தின்படி என்னால் வரலாற்றை எழுத முடியவில்லை. பின்னால் இந்திய வரலாற்றை விரிவாக எழுதப்போகும் ஒரு வரலாற்றாசிரியர் இந்த நூலைக் கடைப் பிடித்து, அந்நூலாசிரியர் கூறுகிறபடியே இந்திய வரலாற்றை எழுதுவாராக' என்று குறிப்பிடுகின்றார். ஆனால் நீலகண்ட சாத்திரியாரோ, வேண்டுமென்றே, "அவர் இப்படிச் சொல்லியுள்ளார்; இவர் அப்படிச் சொல்லியுள்ளார்” என்று தம் விருப்பம் போலவே எழுதி வருகிறார். அவர் எழுதியதாகச் சொன்னேனே History of South India-அந்த நூலில், 'தமிழர் ஆறு இனம் சேர்ந்த ஒரு கலவை இனம்' என்று சொல்லியிருக்கின்றார். நீக்ரோ இனம், ஆத்திரேலிய இனம், அர்மீனிய இனம், மங்கோலிய இனம், நடுக்கடற் பகுதியில் வாழ்ந்த ஒரு மக்களினம் முதலிய ஆறு கலவையினம் என்று சொல்லியிருக்கின்றார். இதையெல்லாம் படிக்கின்றபொழுது எப்படியிருக் கின்றது தெரியுமா? இப்படிப்பட்ட நூல்களை இந்தக் காலத்திலே எழுதும்படியும் தமிழர்கள் விட்டுக் கொண்டிருக்கின்றார்களே என்று வருந்த வேண்டியுள்ளது. இந்த நிலைகள் வேண்டுமானால் எல்லாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் படித்தவர் களுக்காகிலும் தெரிய வேண்டுமா, இல்லையா? இப்படிப்பட்ட நூல்கள் வந்து கொண்டுதாம் இருக்கின்றன. வாங்கப் பெற்றுப் படிக்கப் பெற்றும் வருகின்றன. ஆனால் இவற்றையும் படித்துக் கொண்டு 'எங்கெழிலென் ஞாயிறு எமக்கு' என்று கவலைப் படாமலுந்தாம் இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலைகள் தங்களையும் கெடுத்துக் கொள்வது மட்டுமன்று. தங்கள் முன்னோரையும் பழிக்கின்றதுமாகும். இப்படியிருந்தால் தமிழர் மாந்தர் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பயன் ஏற்படும்?

மாந்தனின் வளர்ச்சி வெறும் உடல் வளர்ச்சி மட்டு மில்லை. உள்ளுயிர் இருக்கின்றதே அதுதான் மாந்தன். அந்த அகக் கரண வளர்ச்சியடையா விட்டால் மாந்த நிலையை அடைய முடியாது. வெறும் உடம்பு மட்டும் வளர்வதாக வைத்துக் காண்டால் அஃது அஃறிணை நிலை என்றுதான் நாம் சொல்லுதல் வேண்டும். அதனால்-தான் நாம் இதைப்பற்றி யெல்லாம் சொல்ல வேண்டியிருக்கின்றது.பகுத்தறிவு, நெஞ்சுரம், தன்மானம் இந்த மூன்றும் இல்லை பலருக்கு அவற்றை ஆரியன்