பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

அப்பாத்துரையம் - 20

இந்தியாவிலிருந்து பிரிந்ததொரு பகுதி மடகஸ்கார்தீவு. 88 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பிரெஞ்சு றீயூனியன் (Fr. Reunion) கொமொரொஸ் தீவு (Comoros) மொரிசியஸ் என்பன ஒரு பெருநிலத்தின் சிறுபகுதிகளாகும்.

மடகஸ்கார் தீவின் தாவரங்கள் உலகின் பிறிதொரு பகுதியில் காணப்படாத வகையாக அமைகின்றன. உயிரினங்களும் அவ்வாறே உருவாகியுள்ளன. பன்னெடுங்காலமாக மடகஸ்கார் தீவு வெளியுலகத் தொடர்பு இல்லாதிருந்ததே இதற்குக் காரணம்.

லெமூர் இனத்தில் 103 ரகங்கள் அடையாளம் காணப்பட்டன (2012). மனிதக் குடியேற்றம் கிமு 350-கிபி 550 இடைப்பட்ட காலத்தில் பல உயிரினம் அழிந்துவிட்டது. பெரும்பாலான குடியேறிகள் போர்னியோ (Borneo) பெருந் தீவிலிருந்து படகுகள் மூலம் வந்து சேர்ந்தனர். ஆபிரிக்கர்கள் கி.பி. 1000 ஆண்டு வரத் தொடங்கினர். மடகஸ்காரின் தேசிய மொழி மலகசே (Malagasay) எனப்படும். பிரெஞ்சு கொலனியாக 1960 வரை இருந்தபடியால் பிரெஞ்சும் தேசிய மொழியாக இடம்பெறுகிறது.

மனித உருவத்திலும் பெரியதான லெமூர்கள் மனிதர் வருகைக்குப்பின் முற்றாக அழிந்துவிட்டன. புதைபடிவ ஆய்வின் போது அவற்றின் எலும்புக் கூடுகள் வெளிவந்துள்ளன. இன்று உயிர்வாழும் லெமூர்களும் அதே அழிவை எதிர்நோக்குகின்றன. உலகின் பச்சை ஓணான் அனைத்தும் மடகஸ்கார் தீவில் தான்தோன்றின என்று விலங்கியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கொன்ட்ானா என்ற கண்டப் பெயர் எப்படித் தோன்றியது. என்பதற்கு விளக்கம் தோ. மத்திய இந்தியாவின் புவியியல் அமைப்பு தென் அரைக்கோளம் (Southern Hemispherse) காணப்படுகிற நாடுகளின் புவியியல் அமைப்புடன் ஒத்துப் போவதால் கொண்டவானா என்ற பெயர் தெளிவு செய்யப்பட்டது. இந்திய மத்திய பகுதி கொன்ட்வான பிராந்தியம் (Gondwana Region) என்று அழைக்கப்படுகிறது.

கொன்ட்வானா என்ற பெயர் 1800 களில் எடுவார்ட் சுவெஸ் (Eduard Suess) என்ற வியன்னா நகர் புவியியல் அறிஞரால் முன்வைக்கப்பட்டது. அவர் தென்னமெரிக்கா, இந்தியா ஆப்பிரிக்கா ஆகியவற்றில் நடந்த புதைபடிவ ஆய்வில் வெளிவந்த ஒரே