பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முனைவர் அ. இராமசாமி

மேனாள் துணைவேந்தர் (பக். 151-158)

தொன்மைத் தமிழர் நாகரிகம் குமரிக்கண்டம் அல்லது இலெமுரியா

சான் என்ற இங்கிலாந்து ஆராய்ச்சியாளர், "கோடியாண்டு கட்கு முன்பு, ஒருக்கால் அதற்கும் முன்பு, ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்திருந்தது”, என்று கூறுகின்றார். பேராசிரியர் எக்கேல் இது பற்றிக் கூறும் போது, "இந்தியப் பெருங்கடல் ஒரு காலத்தில் சந்தாத்தீவுகளில் தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரைவரை பரவியிருந்த ஒரு பெருங்கண்டமாக இருந்தது. கிளேற்றர் என்ற ஆராய்ச்சியாளர் அப்பெருங்கண்டத்தில் வாழ்ந்த குரங்கு போன்ற உயிரினத்தின் பெயரை அதற்குச் சூட்டி இலெமுரியாக் கண்டம் என்று அழைத்தார்”, என்று குறிப்பிடு கின்றார். சர் வால்டர் ராலே, இசுகாட் எலியட், சர் சான் ஈவான்சு, ஓல்டுகாம் ஆகிய ஆராய்ச்சியாளர்களும் குமரிக்குத் தெற்கே பெரும் நிலப்பரப்பு இருந்ததென்றும், அதனை இலெமுரிலயாக் கண்டம் எனப் பெயரிட்டும் அழைக்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களிலும் இது பற்றிய சான்றுகள் நிறைய கிடைத்துள்ளன.

“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமுரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை ஆண்ட தென்னவன் வாழி!”

என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. குமரிமுனைக்குத் தெற்கே நெடுந்தொலைவில் இப்பாண்டியனின் நாட்டில் இருந்த பஃறுளியாறும் பன்மலைத் தொடரும் குமரிமலையும் கடலில்