166
அப்பாத்துரையம் - 20
"(ii) 1000 (Before Present) BP ஐ ஒட்டி தொல் - நாஸ்திராதிக் பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து வடக்கு நோக்கிப் பரவிய பின்னர் (தொல் திராவிட - தமிழிய - மொழியினர் இந்தியா அளவில் நிற்க) நாஸ்திராதிக்கின் ஏனைய பிரிவினர் மையக் கிழக்கு - மைய ஆசியப் பகுதியில் 10000 - 8000 BP கால அளவில் உடனுறைந்த பின்னர், சில ஆயிரம், ஆண்டுகளில் சுமேரியம், இந்தோ ஐரோப்பியம், உரால்
அல்தாயிக், செமித்தியம் ஆகிய மொழிக் குடும்பங்கள் பிரிந்து ஆசியாவில் பல பகுதிகளுக்கும், எகிப்து முதலியவற்றுக்கும் பரவின.
66
" (iii) 7,000 BP (= கிமு 5000) யிலிருந்து இந்தியா முழுவதும் (சிந்து - பஞ்சாப் உட்பட) தமிழிய மொழி பேசியவர்கள் வாழ்ந்து வந்தனர்.
"(iv) மையக்கிழக்கு - மைய ஆசியப் பகுதியில் கி.மு. 6000 - 4000 அளவில் வாழ்ந்த “இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்ப மூலமொழியை (Proto - Indo - Euro- pean) பேசியவர்களிடமிருந்து கிழக்கு நோக்கிப் பிரிந்த இந்தோ இரானியப் பிரிவின் ஒரு உட்கிளையாகிய “வேத - சம்ஸ்கிருத" மொழி பேசுநர் கிமு 2500 - 1500 கால அளவில் சிறு எண்ணிக்கையில் வடமேற்கு இந்திய (சிந்து - பஞ்சாப்) பகுதிக்கு வந்து அங்கு தமிழிய (திராவிட) மொழி பேசுநருடன் கலந்து விட்டனர்.
""
6. இந்தப் பின்புலத்தில் தென் ஆசியாவில் கழி பழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண்டும். தற்போதைய மாந்த இனம் (சுமார் 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகெங்கும் பரவத் தொடங்கிய கால கட்டமே தொல்திராவிட மொழியின் தொடக்க காலம் ஆகலாம். (It may be a question of a very ancient common substratum in South Asia, pre -Dravidian going back even to the original peopling of the world) என்றார் Colin P. Masica (Paper in The Year Book - for 2001 of south Asian languages and Linguistics; New Delhi; Sage Publica- tions)
7. (i) இன்று உலகெங்கும் உள்ள 700 கோடி மனிதர்களுமே (அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், நீக்ரோவர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே) ஹோமோ சேபியன்சு (Homo Sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே தாயிடம் அல்லது குழுவிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலாளர் அனைவரும் ஏற்ற முடிவு. காண்க [Nature (London) 3 May 2012 Vol. 485. பக். 25; மற்றும் Map on p.11 of Cyril Aydon (2009) A brief history of Mankind: 1,50,000 years of Human history (London; Constable and Robinson] எனினும் ஏறத்தாழ மனிதனை யொத்த 'முன்மாந்த' (Hominid) இனங்கள் கடந்த 48 லட்சம்