பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திராவிடப் பண்பு

187

அதுவென்றும், இச்செய்தி தமிழ் மரபுரைகளில் தொனிக்கிறதென்றும் காட்ட முயல்வது பொருத்தமற்றது, ஏற்றுக்கொள்ள இயலாதது.(கண்டங்கள் இன்றைய நிலையை ஒருகோடி ஆண்டுக்கு மன்னரே அடைந்து விட்டன! அப்பொழுது மனிதக்குரங்கு இனம் கூட உருவாக வில்லை!!)

19. எகிப்தில் நடுநிலக்கடலினம் மிகப்பெரும் பழமை உடையது என்பதும், 'மேலீடாகப் பார்க்கும் அளவிலேயே திராவிட இனப்பண்புக்கும் அதன் சூழலுக்கும் இருக்கும் பொருத்தத்தைவிட, நடுநிலக்கடலினத்தின் பண்புடன் அதன் சூழல் பெரிதும் பொருந்தியிருக்கிறது என்பதும் சரியான முடிபு எது என்பதைத் திண்ணமாகக் காட்டுகின்றன. சென்னையிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் மாணவர் அக் குளிர் நாட்டு நிலைமையுடன் எளிதாக இசைந்து விடுகிறார்; மாறாகச் சென்னைக்கு வந்ததும் இப்பகுதி வெப்ப நிலையில் நான் இடர்ப்பட்டேன்.

""

20. திராவிடர் வெளியிலிருந்து வந்தார்களானால், எந்த வழியாக வந்திருக்கலாம்? "முற்காலப் பண்பாடுகளின் இடப்பெயர்ச்சிகள்” என்ற நூலில் (பக்கம்:80) பேராசிரியர் கிராஃவ்டன் எலியட் சுமித் "புதிய பண்பாட்டுக்குரிய மக்கள் அதாவது மேல்திசையிலிருந்து வந்த கடல் வழிப் பயணிகள் திராவிடருக்கு முற்பட்ட மக்களுடன் குருதிக் கலப்புற்று அதன் பயனாகத் திராவிடராயினர்” என்கிறார். அவர்கள் கி.மு. 3000 முதற்கொண்டு, பொதுவாகவும்; சிறப்பாக, கி.மு. 800-ஐ அடுத்துப் பெருவாரியாகவும், புறப்பட்டு, எகிப்தில் உருவாகி வளர்ந்த ஞாயிற்றுக் கல் (heliolithic)வழிபாட்டுப் பண்பாட்டுடன் சென்று, பிற இடப் பண்பாடுகளையும் கலந்து கொண்டவராய், பழைய உலகு புதிய உலகு இரண்டின் கடல் தீரங்களிலும் பரந்தனர்.

(II) அவர் கூற்று 'முத்துச் செம்படவரும் மீன் செம்படவரும் உலோகவாணருமான இம்மேனாட்டுக் கடலோடிகள், பல்லாயிரம் மைல் கடல் பயணம் வழிப் பரந்தனர்' என்பதாகும். எனவே அப்படிக் குடியேறிய வருள் ஆடவர் பலராக இருந்திருக்க முடியாது; பெண்டிர் சிலர்கூட இருத்தல் அரிது. அவர் குறிப்பிடும் அப்பழங் காலத்தில், சிறந்த திராவிடப் பண்பு உருவாவதற்குப் போதிய கால இடைவெளி இருந்திருக்க வழியில்லை; ஆரியப் படையெடுப்பைமிகப் பிந்தியதாகக் கொண்டாலும் அதற்கும் முன்னரே மேனாட்டு கீழ்நாட்டுப் பண்டை மரபுகள் கலந்து புதுமரபு ஒருவாகி, வளர்ந்திருக்க முடியாது. கி.மு. 1000 800 காலகட்டத்துக்கு முன்னரே திராவிடர் இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.

21. திரு. டப்ள்யூ.ஜே.பெரி (1923: The children of the sun 'கதிரவன் சேய்கள்' என்ற நூலில்)எகிப்திய நாகரிகத்தினர் ஆறாவது எகிப்திய அரசகுல