190
அப்பாத்துரையம் - 20
கிடைத்துள்ள பல தகவல்களை ஒருங்கு இணைத்துப் பார்த்தால் மேற் கொண்ட கருதுகோள் சரியாகவே தோன்றுகிறது. அயலார் புடை பெயர்ச்சி (migration)இல்லாமலும் பண்பாட்டுக் கூறுகள் பரவியுள்ளன புடைபெயர்ச்சியுடன் இணைந்தும் பலகூறுகள் பரவியுள்ளன. இணைந்து நடைபெற்ற இடங்களிலெல்லாம் புதுவரவினர் 'வேட்டையில் பயன்படும் ஏதாவது புதுக்கருவிகளை' உடன்கொண்டே வந்துள்ளனர். எடுத்துக் காட்டாக நடுநிலக்கடல் இனத்தவரும் அஸிலியப்(Azilian) பண்பாட்டினரும் வடக்கு நோக்கிப் பரவுகையில் வில் அம்புகளைக் கொண்டு சென்றனர். மேற்கு நோக்கிச் சென்ற மாக்லெமோசியப் (Maglemosian) பண்பாட்டினர் வேட்டை நாய்களைத் தம்முடன் கொண்டுசென்றனர். ஆக திராவிடர் இந்தியாவிற்குள் வருவதற்கு வேட்டையின் வகைதுறைக் கருவிகளில் நிகழ்ந்த மேம்பாடு காரணமாயிருந்திருக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது.
27. (1) இன்றிருக்கும் மொழிகளிலிருந்தே பண்டைத் திராவிட வேடுவர்களின் மனநிலை பற்றிய நுண்ணிய (ஆனால் முழுவிளக்கமற்ற) ஒளி கிட்டுகிறது. திராவிட மொழிகளில் தமிழே தூய்மைமிக்கதாதலால், அதன் உதவியை நாடுவோம். தமிழ் மிக அகலவிரிவுடைய நாகரிகத்தின் நீண்டகால வளர்ச்சியில் உருவானது. ஆயினும் அந்நாகரிகத்தைத் தோற்றுவித்து அம்மொழியை செம்மைப் படுத்திய மனப்பண்பு அவர்கள் வேட்டுவ மூதாதையரிடத்திலிருந்தே வந்திருக்க வேண்டும். (ஒருக்கால் அம்மூதாதை யரிடம் அப்பண்பு முதிராநிலையில் இருந்திருக்கலாம்.)
ய
(II) தமிழ்மொழி அதன் நயநுட்பம், அறிவுத் திட்பம் முதவிய வற்றில் மீப்பெரும் தனிச் சிறப்புடையது. அதனைச் சொல்ஓட்டு நிலை மொழி(Agglutinative language)என்பர். ஆயினும் சொல்திரிபு மொழியின் தொடக்க நிலையில் உள்ளதென்றே (Initial Inflexional stage) அதைக் குறிப்பது சரி. அதில் வினைகளுக்குத் திணை, பால், இட, விகுதிகள் உண்டு. ஆனால் அவை அவ்வவ் இடப்பெயர்களின் திரிபுகளே; படர்க்கை ஒருமைக்குரிய ஆண்பால், பெண்பால், அஃறிணைவடிவங்கள் அவன், அவள், அது என்பவை; எல்லாக் காலங்களுக்கும் உரிய இதே இடங்களின் வினை விகுதிகள் ஆன், ஆள், அது என்பவையே.
(II) ஆனால் பெயர்களுக்கும், இடப்பெயர்களுக்கும் விகுதிகள் உண்டு. இவையும் பெரும்பாலான இடங்களில் தனிச்சொற்கள் என்று தெளிவாகத் தெரியும். பெரும்பாலும் எல்லாப் பெயர்ச்சொற்களும் ஒரே மாதிரியாகத் திரிபடைகின்றன. வேற்றுமை விகுதிகளும் ஒருமை பன்மை இரண்டிலும் மாறுபாடற்றவை. பன்மைக்குப் பன்மை விகுதியை முதலில் சேர்த்துப் பின்னர் வேற்றுமையுடன் உருபு பெறுவதே அதற்குரிய சிறப்பு.(மாட்டுக்கு; மாடுகளுக்கு)