பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(204

அப்பாத்துரையம் - 20

மலையாளத்தில் தான் சாதிமுறை உச்சநிலைக்கு முதிர்ந்து உள்ளது! இது ஒன்றே சாதிமுறை ஆரியரிடம் தோன்றியதன்று, திராவிடரிடையே தோன்றியது என்று காட்டப்போதியதாகும். சாதிமுறை எங்ஙனம் தோன்றி வளர்ச்சியடைந்தது என்பது பின்னர் விளக்கப்படும்.

15. மேலே சொன்ன “ஞாயிறும் நாகமும்" நூலில் ஓல்டுஹாம் (Oldham)ஆரியப்படையெடுப்பின்போது இருந்த திராவிட இந்தியாவின் நாகரிகம் பற்றி வேதங்களிலும், வடமொழி இதிகாசங்களிலும் காணப் பெறும் பகுதிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். ஆரியர்கள் அக்காலத்தில் சிறிதளவு வேளாண்மை அறிந்தவர்களாயினும், முக்கியமாக அவர்கள் நாடோடி மேய்ச்சல் நில நாகரிகத்தினராகவே இருந்தனர் என்பதில் ஐயமில்லை. திராவிடர்களோ இதை விடச் சிறந்த நாகரிகப்படியில் இருந் தனர். ஆரியப்படையெடுப்புக்குப் பிந்தைய நிலைமையைக் குறிக்காமல், படையெடுப்புக் கால நிலைமையை குறிப்பிடுவது வேதங்களில் மிகப் பழைய இருக்குவேதமே. மேற்கூறிய கருத்தை வலியுறுத்த இந்த இருக்கு வேதத்திலிருந்து ஓல்டுஹாம் தரும் பின்வரும் மேற்கோள்களை காட்டினாலே போதுமானது.

"திவோதாசனுக்காக, இந்திரன் சம்பரனுடைய நூறு கோட்டை களைத் தகர்த்தான்

"இந்திரனே, இடியேற்றுப்படை ஏந்தியவனே, நீ புருகூதனுக்காக வேண்டிப் போரிட்டு ஏழு நகரங்களையும் வீழ்த்தினாய்; சுதாஸுக்காக வேண்டி அன்ஹாஸின் செல்வத்தை வேரறுத்தாய்!”

"மனித இனத்திடம் அன்புகொண்டு, நீ பிப்ருவின் நகரங்களை முறியடித்தாய். தஸ்யூக்களுடன் போராடுகையில், நீ ரிஜிஸ்வானைக் காப்பாற்றினாய்.'

66

55

‘துணிகரமாக நீ சுஷ்னாவின் செல்வத்தைத் துடைத்தாய். அவன் கோட்டைகளைத் தகர்த்தாய்.”கோட்டைகள், நகரங்கள், செல்வம்-திராவிட நாகரிகத்தின் மேம்பாட்டைக் காட்ட இவை போதுமானவை. மேலும் ஒல்டுஹாம் கூறுவதாவது:

"இவை யன்றி, திராவிட அசுரரின் பண்புகளாகச் சமஸ்கிருத ஏடுகள் 'இன்பவாழ்க்கை வாய்ப்புகள், மந்திரதந்திரம், மேம்பட்ட சிற்பத்திறன், இறந்தவரை உயிர்ப்பிக்கும் திறன்' ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன!” இச்செய்திகள் தெரியப்படுத்தும் உண்மைகளை ஒதுக்கிவிடக் கூடாது. இவற்றிலிருந்து ஆரியருக்கு முற்பட்ட திராவிட இந்தியாவிலேயே ஆரியரிட மில்லாத, ஆனால் இன்றைய இந்து மதத்தில் இந்து மதத்தில் உயிர்நிலைப்