(216
அப்பாத்துரையம் - 20
1.
ஏக்கே
23.
தோலோஸ் எக்லுஸ்
2.
தே
24.
பஸிஹி
3.
தினே
25.
பஸிஹி ஏக்கே
4.
ஹத்தரி
36.
திந்தோலோஸ்
5.
பஹே
48.
பனஸ்
6.
ஹயே
60.
பத்தோலோஸ்
7.
ஹத்தி
72.
பஹித்தி
8.
அரெக்
84.
9.
நுவே
96.
ஹியா
10.
திஹே
100.
11.
ஏகாரா எக்லுஸ்
101.
12.
தொலோஸ்
200.
13.
தொலோஸ்
―
ஏக்கே
14.
தொலோஸ்
―
தே
ஹைதொலோஸ்
ஹியாஹத்திரி (அல்லது ஸத்திகா)
ஸத்திகா ஏக்கே
தே சத்திகா.....(என்ற வாறு)
( என்றவாறு ) நூறு என்பதற்கான சொல் இந்தியப் பகுதியிலிருந்து வந்துள்ளது; பன்னீ ரடுக்குமுறையானது முரணான இடையீடாகவே வந்துள்ளது. அப்பன்னீரடுக்கு முறையின் தோற்றம் எங்கே? பன்னீரடுக்கு முறையைக் கணக்கியலில் நிலைநாட்டுவதென்பது நம்மாலேயே முடியாத செயல்! மினிக்காய்த் தீவிலுள்ள மக்கள் அதைத் தாமே உருவாக்கியிருக்க முடியாது; இதை இந்தியா விலிருந்தும் பெற்றிருக்க முடியாது. அதற்குரியதாக நாம் நினைக்கக்கூடும் மிக அணித்தான மூலப்பிறப்பிடம் மெசெபொட்டேமியா தான். ஆனால் எண்களுக்கான இச் சொற்களை மேலும் ஆய்வு செய்தால் சால்டியத் தொடர்பை நிறுவமுடியுமா இல்லையா என்பது தெரியவில்லை.
(ii) கல்மாடங்கள், கற்பேழை, கற்குவைகள் (dolmens, kistvaens, cairns)ஆகியவற்றில் இந்தியா வளமுடையதென்பதும், பண்டைக் கடலோடி இனத்தின் ஞாயிற்றுக்கல் (heliolithic)வணக்க நாகரிகத்தின் தாக்கம் இந்தியாவரை வந்துள்ளது என்பதும் யாவருக்கும் தெரிந்தது, ஆனால் இந்த அளவுக்கு எல்லாருக்கும் தெரியவராத செய்தியும் ஒன்று உண்டு. ஹைதராபாத்துக் கற்குவைகளிடையே ஹைதராபாத்து தொல்லியலாய்வுக் கழகம் நடத்திய ஆய்வில் உள்வெட்டுக்கீற்றுக் (incised) குறிகளுடைய பாண்டங்கள் கிடைத்தன. அவற்றுட் பல குறியீடுகள் ஸர் ஆர்தர் எவான்ஸ்