(226
அப்பாத்துரையம் - 20
கூடியதாயினும், அதேசமயம் பயிர்ச்செழிப்பும் பயிர் விளைச்சலும் வளமை யான வாழ்வும் தரவல்லது.
(ii) இந்த கிராம தெய்வத்துக்குப் பல இடங்களில் பல பெயர்கள் உண்டு. பெரும்பாலும் தெலுங்கு நாட்டில் கங்கம்மா என்றும், தமிழகத்தில் மாரியம்மன், மாரியாத்தாள் என்றும் அழைக்கப்படுகிறாள். (ஒயிட் ஹெட் எழுதிய, “தென் இந்தியாவின் சிற்றூர்த் தெய்வங்கள்”)
(iii) அவள் பண்புகள் காளியின் பண்புகளுடன் நூற்றுக்கு நூறு ஒத்தி ருப்பதால், இருவரையும் ஒரே தெய்வமென்றே எண்ணலாம். இருவருமே உருண்டு திரண்ட உறுப்புக்களும், மட்டுமீறி மிக ஒடுங்கிய இடை, கொலை ஆயுதங்கள் தாங்கிய மிகப்பல கைகள், இவற்றை உடையவளாய், தளராது ஆடிக் கொண்டே இருக்கும் இயல்பும் உடையது இப்பெண் தெய்வம். இந்தியாவில் இயற்கையன்னை நற்காலங்களில் இனிய வளமும், பிற காலங்களில் பேரழிவும் பெருஞ்சாவும் தருகிறாள் அல்லவா? அது போன்றதே இப்பெண் தெய்வமும்.
(iv) சில ஊர்களில் ஊர்த்தெய்வங்களுக்கு வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 12 ஆண்டுகளுக்கொருமுறை பூசையிடப் பெறுகிறது. சில இடங்களில் தொடர்ந்து மழைபெய்யாத காலங்களிலும், கொள்ளை நோய் வந்து அவள் கோபக்குறி காட்டும் சமயங்களிலும் மட்டுமே பூசை. இத்தெய்வம் இரத்த வெள்ளப் பலியில் மகிழ்கிறது. பெரும் எண்ணிக்கை யில் சேவல், ஆட்டுக்கடா, செம்மறி ஆகியவை பலியிடப்படுகின்றன. எருமைக்கடா பலிதான் இத்தெய்வம் மிக விரும்புவது.
17. தெலுங்கு நாட்டு மக்கள் உள்ளத்தில் கங்கம்மாவுக்கு ஈடான மதிப்பு வேறு எதற்கும் கிடையாது. ஆனால் அவர்கள் மனப்பாங்குமாறி இன்றும் பூசைமுறைகள் மாறாவிட்டாலும் பூசை செய்யும் அன்பர் மனத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்பகமான செய்திகள் உள்ளன. ஒரு வேளை பிரிட்டிஷ் ஆட்சியாளர் வந்து நாட்டின் அமைதியையும் ஒழுங்கையும் காத்து, "கடவுள் இருப்பது பரமண்டலத்தில், எனினும் பூமண்டலத்திலும் அவர் அதிகாரம் நிலைநிற்கும்” என்ற நன்னம்பிக்கைக் கருத்தை ஊட்டியதால் இம்மாறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணலாம். இதன் பயனாகத் தெலுங்கு நாட்டு மக்கள் கங்கம்மாளை அஞ்சுவதை விடுத்து அன்பு செலுத்தத் தொடங்கியுள்ளனர்; தீமைகளைத் தரும் தெய்வமாகக் கருதாமல், 'தடுத்தாண்டு மக்களைப் பாதுகாப்பவள்’ என்று பலர் கருதுகின்றனர்.
று
18. அன்பாதரவும் பாதுகாப்பும் தரும் ஒரு தெய்வத்தை விரும்பும் இதே மனத்தேவையைத்தான் பழங்காலத்தொட்டுத் தமிழ் நாட்டில் ஐயனார் தெய்வம் நிறைவேற்றுகிறார். கங்கம்மாவும் அவள் தங்கையரும் ஊர்ப்
>