திராவிடப் பண்பு
233
சின்னம் (act of coition). அது ஆண் பக்தர்களின் நெற்றியில் வெண் சுண்ணம் செஞ்சுண்ணத்தால் வரையப்படுகிறது. சிவனைப் போலவே அழித்தலும் விஷ்ணுவின் துணைப்பண்பாகும். திருமால் நெறியினரின் முக்கிய திருநூலான பகவத்கீதை இதை நன்கு தெளிவுபடுத்துகிறது.
(b) கிருஷ்ணன் ஆகப் பிறந்த விஷ்ணு குருட்சேத்திரப் போரில் அருச்சுனனுக்குத் தேரோட்டியாகிறான். போரிலீடுபட்ட பாண்டவரும் கௌரவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளானாலும் உறவினர். உறவினர் களை அழிக்கும் போரில் இறங்க அருச்சுனன் தயங்கி, கண்ணனிடம் கேட்கிறான். “உறவினரைக் கொல்வது பாவம் அல்லவா? இவ்வழிவு பொது அமைதிக்கேடு, பெண்கள் ஒழுக்கக்கேடு, சாதிநெறிக் குழப்பம், சமயக்கடமைப் புறக்கணிப்பு இவற்றுக்கு வழிவகுப்பதல்லவா? அத்துடன் இறுதிக் கடனாற்றவேண்டியவர்கள் சாவதால் முன்னோர் நரகத்துக்கு செல்லவும் வழிவகுப்பதாயிற்றே! இப்படுகொலையில் ஈடுபடுவதை விட, எதிர்தரப்பார் கைப்பட்டு இறத்தலே சிறந்ததல்லவா?'
கண்ணனோ “உன் கடமை போர்செய்து வெற்றிபெறுவதே,” என்கிறான். அத்துடன் தனது விரிவான பகவத்கீதை விரிவுரையில் வைணவ தத்துவங் களையும் தன் இயல்பையும் விளக்குகிறான். "நான் இன்றுள்ளன யாவற்றையும் விழுங்கும் காலன். இனி வரப்போகும் யாவற்றுக்கும் மூலமும் நானே." இங்ஙனம் கூறிவிட்டு, அருச்சுனனுக்கு கண்ணன் பின்வரும் விஸ்வ ரூபத்தைக் காட்டுகிறான்:-
"பல வாய்கள், கண்கள்; தெய்விக அணிகலன்கள் பல. தெய்விகப் படைக் கலங்கள் தாங்கி, வியக்கத்தக்கவனாய் எல்லையற்றவனாய், திசை அத்தனையிலும் திரும்பிய முகங்களுடையவனாய், வானில் ஆயிர ஞாயிறெழுந்தாற்போன்ற
பேரொளியுடையவனாய்
அதைக் கண்டு மலைப்பெய்து மிரண்ட அருச்சுனன் மொழிகளிடையே, அவன் பின்வருவதையும் கூறுகிறான்."உன் பற்கள் காலத்தின் அழிவுக்கனல் (Time's destroying flames) போன்றிருக்கின்றன. நம் படைகளின் தலை சிறந்த வீரர்களெல்லாம் உன் திறந்த வாய்க்குள் பாய, அவர்கள் தலைகள் நெரிந்து தவிடுபொடியாக அரைக்கப்படுகின்றன. தீயையே நாக்காய்ப்படைத்த நீ, எல்லாம் விழுங்குகிற நீ, மனித இனம் உட்பட யாவற்றையும் விழுங்குகிறாய்."
30. திருமாலும் சிவனும் இருவேறு பெயர்களில் விளங்கும் ஒரே கடவுள்தான் எனினும் திருமால் வட இந்தியாவுக்கும் சிவன் தென் னிந்தியாவுக்கும் உரியவராகக்கூடும் (தென்னாடுடைய சிவனே போற்றி- திருவாசகம்). ஆனால், இருவரில் ஒருவரும் வேதத் தெய்வமல்ல. சைவப் பெருந்தலைவர் சங்கராச்சாரியும், வைணவப் பெருந்தலைவர் இராமானுஜாச் சாரியும் திராவிட இந்தியாவிற் பிறந்தவர்கள்தான். எனினும் சிவனும் விஷ்ணுவும் நூற்றுக்கு நூறுதிராவிடக் கடவுள் ஆக இல்லாமலும் இருக்கலாம் . சிவன், திருமால் ஆகிய இரு தெய்வங்களும் இந்தியக்