பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. திராவிடப் பண்பாட்டுக் கூறுகளின்

பொருளாதார அடிப்படை (Economic basis)

நெற்பயிரிடலே திராவிடப்பண்பாட்டின் பொருளியல் அடிப்படை என்பது தெளிவு. நெல்லுடன் பல்வகைச் சிறுதானியங்களும் விளைவிக்கப் பட்டன. எனினும் அவற்றை இரண்டாம் தரக் கூலங்களாகவே கருதினர். பிற கூலவகைகளைப் பயிரிடும் போதும் நெற்பயிருக்காக

உருவாக்கிய

கருவிகளையே அச்சிறுதானியங்களைப் பயிரிடவும் பயன்படுத்தினர்.

2. துருக்கிஸ்தானம் பக்கம் எங்கோ ஓரிடத்திலிருந்து நெல்லைத் திராவிடர் கொணர்ந்தனர் என்று சிலர் கூறுவது தவறு. திராவிடரின் முதல் தாயகமல்ல துருக்கிஸ்தானம். இந்தியாவுக்குள் நுழையுமுன் திராவிடர்கள் வந்தவழியில் எங்காவது நெல் பயிரிட்டிருந்தால்

அவ் விடத்திலேயே தங்கியிருப்பார்களேயொழிய, (எந்தத் தடயமும் விட்டு வைக்காமல்) மொத்தமாக அவ்விடத்தைவிட்டு வந்திருக்க மாட்டார்கள். பிற நாடோடிமக்கள் போலவே வேளாண்மையறியாதவர்களாகவே இருந்தனர் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும்.

3. இந்தியாவின் பல பகுதிகளில் காட்டரிசி தானாகவே என்றும் விளைவது. மேற்குக் கரையில் இன்றும் சில காட்டுவாசிகள் அதை உண்ணவும் செய்கின்றனர். ஆண்டுக்கு எத்தனை நாட்களோ அத்தனை நெல் வகை உண்டு என்பது பழமொழி. அவையனைத்தும் இந்தியக் காட்டரிசியிலிருந்தே தோன்றின என்று கருதுவது தாவரவிய லுக்கு இசைந்ததே.

4. எகிப்தியர் நெல்லைப் பயிரிடுவதற்கு முன்னரே வால்கோதுமை (barley), சாமை ஆகியவற்ைைறப் பயிரிட்டனர், எனக்கருதுகின்றனர். அக்கருத்து சரியாக இருக்கலாம். “கதிரவன் சேய்கள்” என்னும் நூலில் பெரி கூறுகிறபடி, இந்தியாவில் வேளாண்மை செய்யப்பட்ட பயிராகிய நெல் இந்நாட்டுக்குரியதாயிருந்தபோதிலும், தானியம் பயிரிடும் எண்ணம் எகிப்திலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கலாம். இரு நாடுகளுக்கு மிடையே கடல் வழித் தொடர்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே நெற்பயிர் செய்யும் முறை இங்கு வந்திருக்கலாம்.