6
அப்பாத்துரையம் - 20
லங்கையைத் தாப்பிரபனே (Taprabane) என்று கூறுவதுடன் அஃது இந்தியாவினின்று ஒர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கின்றார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநையாறு கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்க வேண்டும் என்றேற்படும்.
கந்தபுராணத்தில் சொல்லப்படும் வீரமகேந்திரம் இலங்கை யின் தெற்கே பல கடல்கோள்களுக்குத் தப்பிக் கிடந்த ஒரு சிறு தீவேயாகும்.
கிழக்குக் கரையில் காவிரிப்பூம்பட்டினமேயன்றி வேறு பல தீவுகளும் அழிந்தன என்று மேலே கூறினோம். புதுச்சேரிக்கு மேற்கே பாகூர்ப்பாறை யிலுள்ள கல்வெட்டில் அது கடலிலிருந்து நாலுகாதம் மேற்கே இருப்பதாகக் குறிப்புக் காணப்படுகிறது. ஆனால், இன்று அது கடலிலிருந்து ஒரு காதமே விலகியிருப்பதால் கடல் 3 காதம் உட்போந்த தென்பது விளங்கும்.
சீர்காழி, தோணிபுரம் என்றழைக்கப்படுவதும் மதுரைவரை ஒருகால் கடல் முன்னேறிவர, பாண்டியன் வேல் எறிந்து அதனை மீண்டும் கவறச்செய்தான் என்ற திருவிளையாடற் கதையும், கன்னியாகுமரியில் இன்று உள்ள மூன்று கோயில்களுள் ஒன்று கடலுள் மூழ்கி அழிந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவதும், தமிழ்நாட்டுள் கடல் பலகால் புகுந்து அழிவுசெய்த தென்பதைக் காட்டுவனவாகும்.
தலை இடை கடைச் சங்கங்களில் இன்னின்ன புலவர்கள் இருந்தனர். இன்னின்ன நூல்கள் செய்தனர். இன்ன இலக்கணம் கையாளப்பட்டது என்ற விவரங்கள் இறையனாரகப் பொருளுரையிலும், பிற நூல்களிலும் கூறப்படுகின்றன.
கடல்கோள்கள் காரணமாகவும், போற்றுவாரற்றும் அந் நாளைய நூல்களுள் பல இறந்துபட்டன.கடைச்சங்கப் புலவர்கள் காலத்திலும், ஏன் பிந்திய நாட் புலவர்கள் காலத்திலுங்கூட இவற்றுள் பல நூல்கள் முழுமையாகவோ பகுதியளவிலோ நிலவி யிருந்தன என்பது அவர்கள் குறிப்புகளாலும் மேற் கோள்களாலும் அறியக்கிடக்கின்றன.
இங்ஙனம் தலைச்சங்க இடைச்சங்க நூல்கள் மிகுதியாக அழிந்து போக, நமக்கு இன்று மீந்துள்ளது தொல்காப்பியம்