(270
அப்பாத்துரையம் - 20
கிளர்ச்சியின்மை ஆகியவற்றை உண்டாக்கி, பாதிக்கப்பட்டவரின் செயல் பாட்டையே கெடுத்துவிடுகிறது. இதனாலன்றோ ஐரோப்பியர் கிருஸ்தவ சமயம் மக்களுக்கு ஊட்டும் நம்பிக்கை நிரந்தர மோட்ச வாழ்வாயிருக்க, இந்தியாவில் அது செயலற்ற நிலை (நிர்வாணம்) ஆக உள்ளது! இந்தியரின் சோர்வுக்கோட்பாடு pessimism மருத்துவரால் இன்ன நோய் என்று கூறமுடியாத நிலையில், உடலுக்குள் நின்றழிக்கிற நரம்புத் தளர்ச்சி யூட்டும் பலவகை நோய் நலிவுகளாலும் ஏற்படுவது. ராக்பெல்லர் நிலையம் கொக்கிப்புழுநோய்த் தடுப்பைக் தேர்ந்தெடுத்தது அது பெருங்கேடு விளைப்பது என்பதனால் மட்டும் அன்று; அதை எதிர்க்கும் முயற்சி வேறு பல நல்லவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதனாலாகும். கொக்கிப்புழு குணப்பட்ட பின்னும் அது (மிக எளிதில்) மீண்டும் தொற்றிவிடாதபடி காக்க மேற்கொள்ளும் துப்புரவுப் பழக்கங்கள், அந்நோயை மட்டுமின்றிப், பிற நோய்களையும் தடுக்கும் என்பதும் ஒரு பெரிய நன்மை.
19. திராவிடரின் மனிதப்பண்பாற்றலை மதிப்பிடுபவர்கள் தாம் காணும் திராவிடரில் மிகப் பெரும்பாலோர் அன்னாருக்குத் தெரியாமலே பலநோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதனைக் உணர வேண்டும்; அவர்கள் நோய்களில் பல அணிமைக்காலம் வரை சிறிதும் உணரப்படாதவை. (ஆனால் உணரப்பட்டபின் மிக எளிதில் தடுக்கக் கூடியவை). மேலும் திராவிடர் நாட்டுப்பற்றும் இப்புதிய செய்திகளால் விரிவடையும். (குறுகிய மனப்பான்மை யின்றி) உதவி எங்கிருந்து வந்தாலும் வரவேற்கும் மனநிலையும் ஏற்படும்- எடுத்துக்காட்டாக அமெரிக்க மருத்துவர்(வேலூர்) செல்வி ஐடா ஸ்கடர் இலங்கை செல்வி வீரசிங்கா ஆகியோர் தொண்டு வரவேற்கப்படுகிறது.
20. தளர்வூட்டும் இந்நோய்களுக்கு எதிரான செயல்பாடுகளால் இந்தியரின் சராசரி அறிவாற்றல் பன்மடங்கு வளருமென்பது உறுதி. அன்றாட வாழ்வே பிரச்னை என்ற இன்றைய நிலைமாறினால், 30 கோடி இந்தியர் திரண்டு உலகின் வல்லமை வாய்ந்த (புதிய வரவு) வல்லரசு ஆக உருப்பெற்று விடுவர்.
21. அவ்வாறு உருப்பெற இந்தியாவுக்கு மேல்நாடுகளின் உதவி தேவை. முதலில் இந்தியர் இன்றைய வெறும் ஆழ்ந்த அடிப்படையற்ற கற்பனைகளைக் கைவிட்டு, எந்த விஷயமாயினும் அதன் இன்றைய நிலைமை, அதன் சாதக பாதகங்களைப் பற்றித் தீரயோசித்தல், மாற்றம் தேவையெனத் தோன்றினால் அம்மாற்றத்தை முதற்கண் சிறு அளவில் செயல் படுத்திப்பார்த்துப் பின்னர் முடிவு செய்தல், என்னும் மேலை விஞ்ஞான முறையாகிய Observation and Experimentation ஐ இந்தியர் பின்பற்றியாக வேண்டும். இதில் வழிகாட்டியாயிருப்பவர் இன்று சர் ஜகதீஷ் சந்திர போஸ் ஆவர். மேலும் பலர் அவர் போல் உருவாகிவருகிறார்கள்.