இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(274) ||
அப்பாத்துரையம் - 20
போன்றவையே. இக்குறிப்பு முழுவதிலுமே இனக்குழு ஆய்வின் racial research அடிப்படையிலேயே சில கருத்துகளை முன்வைத்துள்ளேன்.
(29. கில்பர்ட் சிலெட்டர் இந்நூலை எழுதியது சிந்து நாகரிக எச்சங் களைப் புதிதாக அகழத் தொடங்கிய காலத்தை அடுத்ததாகும். ஆனால் அந்நாகரிகத்தைப்பற்றிய ஆழ்ந்த முழுமையான ஆய்வுக்கட்டுரையை 1925 இல்தான் Illustrated London News இதழில் ஜர். ஜான் மார்ஷல் வெளி யிட்டார். சிலேட்டர் இந்நூலை எழுதிமுடித்தது 1923இல்; அச்சிட்டு வெளிவந்தது 1924.இல். 1925 க்குப் பின்னர் இதன் திருத்திய பதிப்பை வெளியிட வாய்ப்புக் கிடைத்திருந்தால் சிலேட்டர் சிந்து நாகரிக அகழ்வாய்வுக் கண்டு பிடிப்புகளின் அடிப்படையில் தனது வாதங்கள் பலவற்றுக்கு மேலும் வலுவூட்டியிருப்பார்.