பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கில்பர்ட் சிலேட்டர் நூலுக்குப் பின் இணைப்பு

இந்திய நாகரிக உருவாக்கத்தில் திராவிட மொழி பேசுநர் பங்கு: மறுபார்வை தேவை ஆந்த்ரி. எப். ஜோபெர்கு (1990)

(The Dravidian Contribution to the development of Indian Civilisation: a call for reassessment) by Andree F. Sjoberg

(இவ்வாய்வுரையின் முதல் நிலை வடிவம் 31. 5. 1986 அன்று சாந்தா பே Santa fe இல் நாகரிகங்களின் ஒப்பீட்டாய்வுக்கான பன்னாட்டு மன்றம்" நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்டது. பின்னர் 1990 இல் Comparative Civilization Review (23: பக் 40-47) இல் இறுதி வடிவம் வெளிவந்தது.

1. இந்திய நாகரிக வளர்ச்சியில் (இந்து மதவளர்ச்சி உட்பட) திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் பங்கு பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. இப்பொருள் மிக விரிந்தது; எனவே திராவிடர் பங்கு பற்றிய சான்றுகள் பலவற்றை முன்வைத்து அவைகளுக்கும் முக்கியம் அளித்து, வருங்காலத் திலாவது இத்துறை ஆய்வுகள் மேம்பட வேண்டும் என்பதே நோக்கம். இந்திய நாகரிகத்தில் திராவிடர் பங்கு பற்றிய பல கூறுகளில் இன்று நிலவும் கருத்துகளை மறு ஆய்வு செய்து முழுமையானதாக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

2. பல்வேறு ஆய்வுப்புலங்களிலிருந்தும் (சமுதாய மொழியியல் sociolinguistics தரவுகள் சில உட்பட) பல வகைச் செய்திகளையும் ஒரு சேரக்கருதி, அத்துறைகளில் திராவிடர் பங்கு எந்தெந்த அளவுக்கு இருந்தது என்பது சுருக்கமாக விளக்கப்படும். (தனிப்புத்தகம் எழுதினால்தான் முழுமையாக விளக்க இயலும் எனச் சொல்லக்கூடிய முக்கியமான சிலவற்றை இக்கட்டுரையில் எடுத்துக் கொள்ளவில்லை)

3. இம் மீள்பார்வைக்கட்டுரைக்குத் தேவை என்ன? தம்முடைய சமூக ஆற்றலைப் பரவலாகத் தெரிவிக்க இயலாத சிறுபான்மையினரான திராவிட மக்களைப் பற்றி இந்திய நாகரிக ஆய்வாளர்கள் பலர் (இந்தியர்களும், குறிப்பாக பெரும்பாலான மேனாட்டாரும்) எழுதியுள்ளவை திராவிடர்களைப்