பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திராவிடப் பண்பு

283

மொழியமைப்பு, இலக்கணம் இரண்டிலும் திராவிட மொழியின்(தமிழின்) தாக்கத்தைக் கண்டறிந்து நிறுவியுள்ளனர். திராவிடத் தாக்கத்தை வேதங்களாகிய நான்கு சம்ஹிதைகளில் தொடங்கி, ஆரண்யகம், உபநிஷதம் என்றவாறு வேதகாலத்துக்குப் பிந்தைய சமஸ்கிருத இலக்கியங்களிலும் காண்கிறோம்.

18. முண்டா மொழிகளைப் பேசுநர் பேரும்பாலும் சிறு எண்ணிக்கையில் வாழ்ந்தவர்கள்; எழுத்தறிவற்ற தனித்தனிக் குழுவினர்; மிகக் குறைந்த பண்பாட்டுத் தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கக் கூடியவர்கள். (கைப்பர் 1967 Indo Iranian Journal 10:82-102 கட்டுரையில் கூறுவது போல வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே முண்டா மொழிகள் திராவிட மொழியியல் கூறுகளை ஏற்றுப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன) மாறாக இந்தியாவில் இருந்த ஆரியமல்லாத மொழி பேசுநர்களுள் பண்டைக் காலத்திலிருந்தே தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலும் பலத்துடனும் வாழ்ந்து வந்தவர்கள் திராவிடமொழி பேசுநர்தாம். வேத காலத்திலேயே திராவிடர் சிலர் பிராமணர்களாகத் ஏற்கப்பட்டு விட்டனர். இதனைப் பின்வரும் அறிஞர்கள் கருத்துகளிலிருந்து உணரலாம்.

""

""

(i) கே. மீனாட்சி (1985) "சமஸ்கிருதச் செம்மொழியின் தோற்றம்' IJDL 14: 209-223 "வேத மந்திரங்களில் பல ஆரியரல்லாதார் செய்தவை’ மேலும் பார்க்கத்தக்கது: குஞ்சுண்ணிராஜா(1939) "ரிக் வேதத்தை எழுதி யவர்கள்” (கே.வி. ரங்கசாமி ஐயங்கார் பாராட்டுமலர்)

(ii) F.B.J கைப்பர்(1967) மேற்சொன்ன Indo Iranian Journal கட்டுரை பக் 87: வேதப்பாடல்களை எழுதிய ரிஷிகள் பெயர்களுள் பல, ஆரியமல்லாதவையாக இருப்பது இந்தியாவில், ஆரியர் வருவதற்கு முன்னே வசித்து வந்த திராவிடமொழி பேசுநரும், ஆரியர்களோடு சேர்ந்து ரிஷிகளாகிவிட்டனர் என்பதை நிறுவுகிறது.

(iii) ஏ. எல். பஷாம் 1979 கட்டுரை(ப.5): வேதகாலத்துக்குப் பின்னர் (கி.மு. 1000க்குப் பின்னர்) தவம், சடங்குகளைச் செய்து வந்த திராவிட மொழி பேசுநரும் ஆரியராக ஏற்கப்பட்டனர்.

55

(iv) சுநீதி குமார் சட்டர்ஜி (1965: "திராவிட மொழிகள் பற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழக உரை பக் 55-57: வேதங்களை முறைப்படுத்திய வேதவியாசரும் ஆரியரல்லாதவரே; பல ரிஷிகளின் பரம்பரையும் ஆரியமல்லாததே.

19.(i) தமிழ்ச்சங்க இலக்கியங்கள் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம்) ஆகியவை, தமிழ்மக்கள் கி.மு. 300க்கு முன்னரே (அதாவது