பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




310

அப்பாத்துரையம் - 20

ஜாதிதான் அன்றாடச் செயல்பாட்டின் மையக் கூறாக core அமைந்தது. ஜாதியே பிற்றை இந்து மதத்தில் கோலோச்சியதாகும்.

(ii) முதலில் ஆரியர்களிடம் வழங்கிய மூன்று வர்ணங்களோடு நான்காவதாக சூத்திரர்களைச் சேர்த்த பின்னர் முந்தை வேத காலத்தில் இருந்த சமுதாய வேறுபாடுகள் கடுமையாயின. சூத்திரர் கீழ்நிலையினர் menials பிற்றை வேத காலத்தில் திராவிட மொழி பேசுநர்களுள் மிகப் பெரும்பாலோரும், ஆரியமல்லாத வேறு சிலரும் சூத்திரர்களில் அடக்கப்பட்டனர். ஆரிய மொழிபேசுநர் இந்தியாவுக்கு வருமுன்னர் இங்கிருந்த ஆரியமல்லாத மக்கள் சிலரிடம், குறிப்பாக அக்காலத்தில் திராவிடமோழி பேசுபவர்களாக வடநாட்டில் இருந்தவர் களிடையே (அவர்கள் பண்பாட்டில் ஆரியத்தாக்கம் ஏற்படு முன்னரே) ஜாதிமுறை போன்ற ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதற்கு வலுவான சான்றுகள் உண்டு. பிற்காலத்தில் 'வர்ணக்' கோட்பாடுகளும் மாற்றப்பட்டு வர்ணம், ஜாதி இரண்டும் ஊடும் பாவுமாகக் கலந்து பிற்காலத்தின் மிக விரிவான, எண்ணிறந்த படிநிலைகளும், தர நிர்ணயங்களும் அடங்கிய ஜாதி முறை நிலை பெற்றது.

(iii) ஹார்ட் தனது 1975 The poems of Ancient Tamils: their milieu and their Sanskrit counter parts நூலில் சங்ககாலத் தமிழ் மக்களிடையே கூட சில மக்கட் பிரிவினரிடையே அந்தஸ்து வேறுபாடு இருந்ததற்கான சான்றுகளைத் தந்துள்ளார். சாதியோடு பிணைந்த புனிதம் - தீட்டு Purity - Pollution கோட்பாடு திராவிடருடையது தான். பொதுவாகப் பார்த்தால் இன்றைய இந்தியாவில் பல்வேறு சாதி களிடையே மிகக் கடுமையான சாதிஅடிப்படையிலமைந்த வேறுபாடு களை இன்றும் நிலைபெறவைத்துளளவர்கள் திராவிட மொழி பேசுநர் தாம்.

67.(i) இந்தியாவில் படைக் கருவிப்பயிற்சி martial arts பற்றிச் சில கூற வேண்டும். (போரிடும் கலையைச் சுட்டும் martial arts என்று நினைத்துவிடாதீர்!) இது படைக்கருவியை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதைப் பயிற்றும் கலை; தொன்று தொட்டு ஆன்மீகக் கட்டுப்பாடு, மருத்துவ ஆற்றல்கள் இவற்றோடும் தொடர்புடையது ஆகும். இது ஆசியக் கண்டத்தில் உருவானது. இந்தியாவிலோ, சீனாவிலோ, அல்லது 2000 ஆண்டுகட்கு முன்னரே அவ்விரு நாடுகளையும் இணைத்த கடல், நிலவழிப் போக்குவரத்துப் பாட்டைப் பகுதிகளிலோ உருவாகியிருக்க வேண்டும்.

(ii) வட இந்தியாவில் படைக் கருவிப் பயிற்சி இருந்தது பற்றி இந்திய இதிகாசங்களும் அக்நி புராணமும் கூறுகின்றன. பிற பயிற்சிகளுடன்