18
அப்பாத்துரையம் - 20
நாகரிகத்தின் கிளையாகிய அத்லாந்திய நாகரிகத்தை ஒட்டி ஏற்பட்டவையே.
னைய பகுதிகளுள், இந்தியாவில் மண் செடி கொடி உயிர் இனங்கள் பெரிதும் ஆப்பிரிக்கா இனங்களை ஒத்திருக்கின்றன; அதுவே போன்று கிழக்கிந்தியத் தீவுகள், மலாய், பஸிபிக் தீவுகள் இவை ஒருசார் ஆஸ்திரேலிய இனங்களையும், ஒருசார் வட அமெரிக்காவிலுள்ள காலிபோர்னிய இனங்களையும் ஒத்திருக்கி ன்றமை காணலாம்.
ஆப்பிரிக்காப் பக்கமிருக்கும் மட காஸ்கர் (Madagascar) தீவு நில இயல்படி ஆப்பிரிக்காவுடன் வைத்தெண்ணப்படினும்,உயிர் வகை செடி கொடி வகைச் சார்பில் முற்றிலும் ஆப்பிரிக்கா வையும் ஒவ்வாது ஆசியாவையும் ஒவ்வாது இரண்டிற்கும் இடைப்பட்ட தொரு நிலையிலிருப்பது குறிப்பிடத்தக்கது.
சில காலங்களுக்குமுன் ஸர் ஜான் மரே (Sir John Murry) என்பவர் இந்துமாக்கடல் ஆராய்ச்சிக்கு என இருபதினாயிரம் பொன் முதலீடு வைத்துச் சென்றனர். அதன் பயனாக நிறுவப்பெற்ற ஆராய்ச்சிக் கழகத்தார், சிந்து ஆறும் அவ் ஆற்றின் பள்ளத்தாக்கும், அதன் அருகிலுள்ள ஆரவல்லி மலை (Aravalli Hills)களும் கடலுள் பெருந்தொலை சொக்கோத்ரா (Sokotra) வரை நீண்டு கிடந்ததற்கான குறிகள் அத் தீவில் உள்ளன என்று கூறுகின்றனர். குறிப்பாக ஆரவல்லி மலையின் தொடர்ச்சியும் சிந்து ஓடிய பள்ளத்தாக்கும் அதிற் காணப்படுகின்றனவாம்.
ஆப்பிரிக்காவில் போபோர்ட் (Beaufort) குழுவைச்சார்ந்த செடி வகை உயிர்வகைகள் இந்தியாவில் உள்ள பஞ்செத்துக்கள் (Panchets) கத்தினிகள் (Kathnis) என்பவற்றையும், ஆப்பிரிக்கா விலுள்ள உவிட்டனெஜ் (Uitenhage) குழுவைச் சேர்ந்தவை இந்தியாவிலுள்ள இராஜ்மகால் (Rajmahal) செடிகளையும் பெரிதும் ஒத்திருக்கின்றன.
ஜுராஸ்ஸிக் (Jurassic) உயிர்க்குறிகளுள் கச்சைச் சார்ந்தவை பெரிதும் ஆப்பிரிக்க உருப்படிகள் போன்றே ரு க்கின்றன என்று பேரறிஞர் ஸ்டோலீஸ்கா (Stoleisks) உரைக்கின்றார். இவருடன் ஒத்துழைத்தவரான திரு கிரீஸ்பக் (Mr. Griesbach) ஆப்பிரிக்காவில் உம்தயுனி ஆற்றின் கரையிற்கண்ட