பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 20

ழி

இந் நான்கு ஊழிக் கணக்கை வரலாற்றிஞர் பலர் ஏற்க வில்லை. எனினும், இத்தகையோருங்கூட மூன்றாம் ஊ றுதியைப் பற்றிய மட்டில் அதன் கணக்கு நம்பத்தக்கதே என்கின்றனர். இவரது ஆராய்ச்சி முடிவை நோக்குவோம். இந்திய வான நூலாரின் ஊழிக்கணக்கு இந்திய வானநூல் வகுக்கப்பட்ட பின்னரே ஏற்பட்டது. இந்திய வானநூல் வகுக்கப்பட்டது கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்த வராஹமிஹிரராலேயே என்று வரலாற்றிஞர் சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர், ன்னும் சிலர், இவருக்கு முன்னமே வகுக்கப்பட்டது என்கின்றனர். எப்படியும் ஊழிக் கணக்கு ஊழிகளுக்குப் பின்னர்த் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதற்கையமில்லை.

ஆகவே, நாட்டாரிடையே நான்கு ஊழிகள் உண்டு என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வானநூலார் தமது நூலாராய்ச்சிக் கிணங்கக் கால அளவை ஏற்படுத்திக் கொண்டனர் என்பதே பொருத்தமானது.

இதன்படி ஊ ஊழிகள் வான நூலளவிற்குக் குறைந்தவை யாயினும் மக்களிடை நெடுநாள் மரபாக வழங்கிவந்தபடியால் மிகப் பழைமையுடைய பெரு மாறுதல்களின் நினைவினால் ஏற்பட்டவையே என்று பெறப்படும். அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் அடங்கியதாக இருக்கக்கூடும் என்று மட்டுமே நாம் சொல்லமுடியும்.

பொதுப்பட ஊ ஊழிகளை வரையறுக்க இதனால் கூடவில்லை யாயினும் மூன்றாம் ஊ ழியிறுதியைப் பற்றிய அளவில்மட்டும் கணித நூலாரது காலவரையறையை அப்படியே ஏற்றுக்கொள்ள இடமுண்டு. ஏனெனில், புராணங்கள் எழுதப் பெற்றது மூன்றாம் ஊழியிறுதியில் என்று அப்புராணங்கள் தாமே கூறுகின்றன.

மூன்றாம் ஊழிக்குப் பிந்திய காலங்களிலுள்ள நந்தர்கள், மௌரியர் முதலியோரது வரலாற்றை அது கூறினும் அதனை எதிர்காலத்தில் வைத்துக் கூறுவதால் அப் புராணம் எழுதத் தாடங்கிய காலம், அதில் நிகழ்காலமாக ஏற்றுக்கொள்ளப் பட்ட, சனமேசய அரசன் காலம், அஃதாவது நான்காமூழித் தொடக்கம் என்றேற்படுகிறது. இந்திய மரபுரைகளின்