இலெமூரியா அல்லது குமரிக்கண்டம்
69
ஒருவரோடு ஒருவர் போர்த்திறங்காட்டி அழிவு செய்தபடி அவர்கள் செய்யவுமில்லை. செய்ய முயலவுமில்லை; தம்மைச் சுற்றியுள்ள பெரிய விலங்கினங்கள் பாம்புகள் இவற்றிலிருந்து கூட அவர்கள் தப்பி ஒதுங்கி நிற்க முயன்றனரேயன்றி அவற்றை அழிவு செய்ய முற்பட்டதாகத் தெரியவில்லை.
அழிவுத் திறம் மிகுந்த நாகரிக காலங்களிலேதான் கோட்டை கொத்தளங்களும், பெரு நகரங்களும் மிகுந்திருக்கும், அத்லாத்திய நாகரிகம் இத்தகையதே. ஆனால், இலெமூரியாவில் வீடுகளும் ஊர்களும் மனித வாழ்க்கை நலமொன்றையே நோக்கமாகக் கொண்டு, தற்கால மலையாள நாட்டு வீடுகளைப் போன்று இடைவெளிகளும் சோலைகளும் விட்டுக் கட்டப்பட்டவையே யாகும். ஆங்காங்குள்ள சில நகரங்களும் வாணிபத் துறைகள் அல்லது தொழில் துறைகளாகவே அமைந்திருந்தன.
இன்று இலெமூரியர் நாகரிகத்தைப் பற்றி நாம் அறிய உதவும் கட்டிடங்கள் அவர்கள் கோயில்கள் மட்டுமேயாகும். அவர்கள் ஊர்களும் வீடுகளும், இன்றைய ஜப்பானியர் வீடுகளைப் போல் எரிமலை, நில அதிர்ச்சி முதலியவை காரணமாக அழியும் பொருள்களாலேயே கட்டப்பட்டன. இலெமூரியர் உலகியல் வாழ்வில் பற்றுக் குறைந்திருந்ததும் இதற்கு இன்னொரு காரணம். தமிழரும் இதே கருத்துடையர் என்பதைத் தமிழ் மூதாட்டியார் 'இடம்பட வீடெடேல்' என்று கூறியிருப்பதனால் அறிக.