பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

81

யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்களே. நான் என்ன செய்வேன்?”என்று மீண்டும் கதறி யழலானாள்.

கு

மாமியார் கேட்கும் கேள்விகளுக்கு அவள் விடை சொல்லவும் முடியவில்லை. “வீட்டின் எல்லாப்பொருள்களும் வைத்தது வைத்தபடி இருக்கிறதே. அவற்றை யெல்லாம் விட்டுப் பிள்ளைக்கு மட்டுமா திருடன் வருவான். நான் விடியற்காலம் போகும்போது உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையை அதற்குள் எங்கே போக்கடித்தாய்?” என்று அவள் பலவாறு கடிந்து

கொண்டாள்.

பிள்ளை காணாமற்போன துன்பம் ஒருபுறம். மாமியார் தொல்லை ஒருபுறம் சீதைக்குப் பெரு வதையாயிருந்தது. அச் சமயத்தில் அவளுக்கு ஒரே ஓர் எண்ணம் தான் தோன்றிற்று. நங்கி மருந்துகொடுத்தபின் தான் என்றுமில்லாத நெடுந்தூக்கம் தூங்கியதை அவள் எண்ணினாள். 'நங்கிதான் எடுத்திருக்க வேண்டும்' என்று அவள் போக்குரை கூறினாள்.

ஆனால் நங்கியிடம் கேட்டபோது அவள் சீறிவிழுந்து 'மருந்துக்கில்லாத குடும்பத்திற்கு நடந்து வந்து பண்டுவம் பார்த்தேனல்லவா? அதற்கு இந்தப் பரிசு வேண்டியதுதான்.வலிய வந்து திருட்டுப் பட்டம் வாங்கவோ உனக்கு இரவு பகலாய் உழைத்தேன்?”என்று தாவினாள். மாமி அவளிடம் ஆதரவாய்ப் பேசி 'அம்மா, பிள்ளை யிழந்த துயரத்தால் ஏதோ கூறினாள். வருந்தாதே' என்று சொல்லித் தன்னிடமிருந்த ஒன்றிரண்டு காசுகளைக் கொட்டிக் கொடுத்து அவளைத் தேற்றி அனுப்பி னாள். ஆனால் நங்கி அத்துடன் அமையாமல் ஊர்ப்புறத்துள்ள பேய்களைப் பற்றிக் கதையளந்து போனாள். “மனிதர் யார் குழந்தையைப் பார்த்துத் திருடுவார். இதெல்லாம் அந்தப் பேய் மரத்தடி வீராயியின் விளையாட்டுத்தான் என்பதில் ஐய மில்லை" என்பாள். ஆனால், சீதை மட்டும் பேயை நம்பவு மில்லை, நம்பவிரும்பவுமில்லை. ‘அது எந்த மனிதரிடமாவது இருந்து வாழட்டும், கடவுளே' என்று எண்ணியிருப்பாள்.

நலிந்தோர்க்கு நாள் செய்யும் துணையன்றித் துணை யில்லையென்பதற்கிணங்க, சீதையின் ஆற்றொணாத்துயரம் நாட்செல்லச் செல்லச் சிறிது சிறிதாகக் குறைந்தது. அவள்