பக்கம்:அப்பாத்துரையம் 3.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

அப்பாத்துரையம் - 3

தென்மா கண்ட'மாகக் கிடந்த காலம் அது. இதனையே 'இலெமூரியா' என்னும் குமரிக் கண்டம் என்று கூறுகிறோம். இதன் வாழ்வுக் காலம் இன்றைக்கு இரண்டு நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரிருந்து ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை என்று மண்ணூலார் கணிக்கின்றனர்.

குமரிக்கண்டம்

இவ்வூழியில் சிந்து கங்கைவெளி இருந்ததில்லை. சிந்துவும் கங்கையும் பிரமபுத்திராவும் பிறப்பதற்கிடமான இமயமலை இருந்ததில்லை. அவை இன்றிருக்கும் இடத்தில் ஓர் அகன்ற நடுமாகடல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் இதே சமயத்தில்கோதாவரியும் காவிரியும் வைகையும் தண் பொருநையும் உயிர் ஆறுகளாக - இன்றைவிடப் பெரிய ஆறுகளாக ஓடின. நீலமலையும் ஆனைமலையும் பொதியமலையும் இருந்தன - இன்றைவிட மிகப் பெரிய, மிக உயரிய மலைகளாக நிமிர்ந்து நின்றன. இன்றைய தமிழனின் முன்னோர்கள் அன்றும் தமிழகத்தில் வாழ்ந்தனர். ஆனால் இன்றைய தமிழன் வணங்கும் தெய்வங்களின் தாயகங்கள் - சிவபெருமான் கயிலைமலை, அவர் உருத்திராட்ச மணி விளையும் திபெத்து மேடு, திருமால் திருப்பிறவி எடுத்த அயோத்தி, வடமதுரை இவற்றின் தடமே அன்று கிடையாது.

-

இன்றைய தமிழனிடம் பழம்பெருமை பேசும் இனங்கள், அன்று பிறக்கவில்லை. பனி வெளியிலே பனி வெளியாய் அவை இயற்கை வெளியில் உலகின!

-

இந்து ஐரோப்பிய இனம் அதாவது ஆரிய இனம் தோன்றி வளர்ந்து பரவிய வெளி வட ஐரோப்பிய, வட ஆசியப் பனிவெளியாகும். பொதுவுடைமைப் பூங்காவாக இன்று இயங்கும் சோவியத் மாநிலப்பரப்பு இதுவே. இதுவும் தென்மா கண்டம் நிலவிய காலத்தில் உடன் நிலவிய பரப்பேயாகும். இப்பெரும் பரப்பில் அன்று மனித இனமே வாழவில்லை என்று ஆராய்ச்சியறிஞர் கருதுகின்றனர். ஆயினும் இன்றைய மனித இனத்துக்கு முற்பட்ட அரை மனித இனங்கள் வட ஆசியா, வட ஐரோப்பாவிலும் வேட்டையாடித் திரிந்தனர். அவர்கள் இன

-