சரித்திரம் பேசுகிறது
முக்கியத்துவம் உடையதாயிருந்தது.
89
வணிகர் அதைச்
சீனாவிலிருந்து நிலவழியாக நடு ஆசியா, ஈராக், அரேபியா கடந்து எகிப்துக்குக் கொண்டு சென்று விற்றனர். ஆனால் கி.மு. 2000த்திலிருந்து திடுமென இந்த நிலவழி வாணிகம் நின்று விட்டது. விரைவில் மீண்டும் அவ் வாணிகம் தொடர்ந்தது. ஆனால் இத்தடவை அது நிலவழிப் பாதையில் செல்லவில்லை. கடல் வழியாகத் தென்கிழக்காசியாவைச் சுற்றிக்கொண்டு தமிழகம் கடந்து செங்கடல் கரைக்குச் சென்றது. இடையே அவர்கள் தமிழகக் கடற்கரையைச் சுற்றவில்லை. தமிழகக் கீழ்க்கரையில் சரக்குகளைக் காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்கினர். அங்கிருந்து வண்டிகளில் சரக்கேற்றி, மேல்கரையில் வஞ்சி அல்லது தொண்டித்துறையில் கொண்டு சென்று மீண்டும் கப்பலேற்றினர்.
சீனா-எகிப்து நிலவழிப் பாதை, இப்போது தமிழகத்தின் கடற்பாதையாயிற்று. நிலவழிப் பாதையில் அராபிய வணிகரே பெரும்பங்கு கொண்டிருந்தனர். ஆனால் கடல்வழித் தமிழகப் பாதையில் தமிழர் பெரும்பங்கு கொண்டனர். தமிழகத்தின் பண்டைச் செல்வப் பெருக்குக்கு இதுவும் ஒரு பெருங் காரணமாய் அமைந்தது.
வாணிகப்போக்கின் இப்பெரு மாற்றத்துக்கு ஆரியர் படை யெடுப்பே காரணம் என்று வரலாற்றறிஞர் ஊகிக்கின்றனர். கி.மு. 2000-லிருந்து கி.மு.1500 கடந்து நீண்டகாலம் ஆரியர் எழுச்சியால் நடு ஆசியா, பாரசீகம், சிந்துவெளி ஆகிய பரப்புக்கள் முழுதும் அமைதியிழந்தன.
சிந்து வெளியின் அழிபாடுகள் புதைபொருள் துறையிலும், பார்சிகளின் அவெஸ்தாப் பழம்பாடல்கள், இந்திய ஆரியரின் இருக்கு வேதப் பழம்பாடல்கள் ஆகியவை மொழி மரபுத் துறையிலும் இவ் வெழுச்சிக்குச் சான்றுகள் தருகின்றன.
தமிழ், திராவிடம் என்ற சொற்கள்
தமிழ் என்ற பெயர் திராவிடம் என்ற பெயரின் மரூஉ என்று சில ஆராய்ச்சியாளர் கருதினர். மொழி நூல் மரபில் இம் மாறுதல் இயற்கைக்கு மாறுபட்டதன்று. திராவிடம், திராமிடம், திராமிளம், தாமிளம், தமிளம், தமிழ் என்ற மாறுபாடு