சரித்திரம் பேசுகிறது
121
இங்கே ஆரிய இன எழுச்சியாளர்கள் நாட்டுப் பற்றால் உந்தப்படவில்லை, இனப்பற்றால் உந்தப்படுகின்றனர்.இனப்பற்று சாதிப்பற்றில் வேரூன்றியுள்ளது.தென்றலின் கருவகம்வடக்கானாலும், தெற்கானாலும், அதற்குரிய இனம் ஆரிய இனமானாலும் அன்றானாலும், அது இந்தியா முழுவதும் பரந்த ஓர் அடிப்படை இனம் சார்ந்தது; இந்திய மக்களின் பெரும்பான்மையினரைச் சார்ந்தது என்பதில் எவருக்கும் ஐயமில்லை. ஆனால் ஆரிய இன எழுச்சியாளர் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை இயக்கும் ஆட்சியாளர்களானாலும், அந்தப் பெரும்பான்மை மக்களிடம் பற்றுடையவர்களல்ல. சிறுபான்மையினராகிய தங்கள் உயர்சாதியுடனேயே அவர்கள் இனப்பற்று, நாட்டுப்பற்று, உலகப் பற்று, கடவுட்பற்றுக்கூட நின்றுவிடுகிறது.
‘தன் கண் ஒன்று கெட்டால்கூடக் கேடில்லை, அயலான் கண் இரண்டும் கெடவேண்டும்' என்ற நீதி இன்றைய ஆரிய இனப்பற்றாளர் நீதியாகியுள்ளது. இந்திய நாகரிகத்தின் உயர்வைத் தனித்தோ, மேலை நாகரிகத்தை உயர்த்தியோகூடத் தென்னக நாகரிகத்தைப் புறக்கணித்தல் தங்கள் நீங்கா னக்கடமை என்று அவர்கள் கருதுகின்றனர்.
உலகின் மேலை வானொளி கிழக்கே திரும்பும் காலம் வடக்கு நோக்கிய வாடை அவா தெற்கு நோக்கிய தென்றல் அவாவாக மாறும் என்று நாம் நம்பலாம்.