சரித்திரம் பேசுகிறது சுதந்திரத்தின் காவல் வீடு
133
தமிழரின் கடற்படையும் கடற் பேரரசுகளும் கடல் வாணிகமும் தமிழர் சுதந்திரத்தை மட்டுமல்ல, கீழை உலகின் சுதந்திரத்தையே நீடித்துக் காத்துவந்த கருவிகள் ஆகும். வருங்காலத்தில் வரலாற்றில் தமிழகமே கீழை உலகத்துக்குரிய சுதந்திரத்தின் காவல் வீடு என்பது விளக்கம் பெறுவது உறுதி.
‘கடல் எல்லையைத்தானே கடற்படை காக்கும்! நில எல்லையை எவ்வாறு காக்கும்?' என்று இன்று நாம் வினவக்கூடும். வரலாறு காட்டும் படிப்பினை இவ் வெண்ணம் தவறு என்பதைக் காட்டும்.
நாடோடிகளாக வடக்கிலிருந்து ஓயாது படையெடுத்து வந்த நாகரிகமற்ற இனங்களுக்கு இயற்கை தந்த, தருகிற ஆற்றல் பெரிது. செழிப்பும் வளமும் இன்ப வாழ்வும் வீரத்தைக் குறைக்கும். கடுமை மிக்க நாடோடி வாழ்வு அதை வளர்க்கும் தவிர குடிவாழ்வும் நிலையான நாடு நகர் வாழ்வும் உடையவருக்குப் போரில் தற்காப்பு அவசியம்.நாடோடிகளுக்குத் தற்காப்புத் தேவையில்லை. தற்காப்பாகப் போரிடுபவர் திடீர்த் தாக்குதலை எதிர்பார்த்து எப்போதும் போருக்குச் சித்தமா யிருக்கவேண்டும். நாடோடிகள் தாம் நினைத்த நேரம் தாக்கலாம். மேலும் போர் குடிநிலை உடையவர்களுக்கு வாழ்வில் ஒரு சிறு கூறு. மற்ற தொழில்கள் அவர்களுக்கு முக்கியமானவை. அவற்றை விட்டுவிட்டே போருக்கு எழவேண்டும். நாடோடிகளுக்குப் போரும் கொள்ளையும்தான் வாழ்க்கைத் தொழில்.
எனவே நாடோடிகளாகப் படையெடுப்பவரைத் தடுத்து நிறுத்த, குடிவாழ்வு, நிலையிலுள்ள நாகரிக மக்கள் ஓயாப் புதுவளமும் கட்டுப்பாடுகளும் வலிமையும் உடையவராயிருக்க வேண்டும்.நிலவரப் படை உடையவராயிருக்க வேண்டும்.
தமிழரசர்க்குக் கடற்படை புது வளம் தந்தது. நிலவரப் படைக்கு இது உதவிற்று. அத்துடன் இந்தியாவில் அன்றும், ன்றும் குதிரைகள் வளமாக வளர்வதில்லை. அது அரேபி யாவின் செல்வம். தமிழரசர் ஆண்டுதோறும் குதிரைப்படை வளர்த்துக்குக் கடலையே நம்பியிருந்தனர்.