சரித்திரம் பேசுகிறது
139
மனப்பான்மை தேவையில்லாதிருக்கலாம். ஆனால் இதை வளர்த்துக்கொள்ளுதல் நன்று. அதே சமயம் பிந்திவிட்ட
இன்
றைய நிலையில் பழமைபற்றிய அறிவு ஒரு தூண்டுதல் மட்டுமல்ல, ஒரு துணைகூட ஆகும்.
ஊன்றி நோக்கினால், இந்திய மாநிலம், தமிழகம் ஆகியவற்றின் பிரச்சினை, பழமையில் பெருமையா,புதுமையில் பெருமையா என்பதல்ல. இரண்டும் மேலைநாடுகளில்கூட இல்லாத பண்புகளல்ல. ஆனால் பெருமை, சிறுமை இரண்டும் அங்கே நாட்டு மக்கள் அனைவருக்கும் சரிசமமாக உரியது. எனவே பெருமை மேலும் பெருமையில் ஊக்குகிறது. சிறுமை பெருமை தூண்டுகிறது. ஆனால் கீழை உலகில் சிறுமையும் பெருமையும் நாட்டு மக்களிடையே வேறுவேறு வகை உணர்ச்சி களையும் உணர்ச்சி வேறுபாடுகளையும் உண்டுபண்ணுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆரிய இன எழுச்சியைப் பற்றிப் படிக்கும் இந்தியருள் ஒரு திசையினர், ஒரு சாதியினர், ஒரு மொழியினர் தாம் ஆரியர் என்று நினைத்துப் பெருமிதம் கொள்கின்றனர். மற்றொரு பகுதியினர், மொழியினர், சாதியினர் அங்ஙனம் பெருமிதம் கொள்வதில்லை. சில சமயம் ஒரே வரலாற்றை வாசிப்பதன் மூலம் மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சிக்கு மாறாக, வேற்றுமை உணர்ச்சியே மிகுதியாகின்றது.
வரலாற்றின் இத்தகைய பிளவுபட்ட உணர்ச்சியே இந்திய மாநிலத்தை இந்தியா-பாகிஸ்தான் எனப் பிரித்துள்ளது.
இது அரசியற் பிரிவினை மட்டுமல்ல; பிரிட் டிஷார் வருமுன் இதனைக் காட்டிலும் எத்தனையோ பிரிவினைக் கூறுகள் இருந்தன. இப்பிரிவின ப்பிரிவினை அரசியற் பிரிவினைக்கு முன்னும் வேற்றுமை உணர்ச்சி வளர்த்தது. அதன் பின்னும்கூட நேச உணர்ச்சி வளரவில்லை. தமிழகம், தென்னகம் ஆகியவற்றின் நிலை இதனின்றும் வேறுபட்ட தல்ல. உண்மையில் பிரிவினை இல்லாமலும் தமிழர் தம் மொழி, பண்பாடு, கல்வி ஆகிய வகையில் தன்னுரிமையுடையவராயில்லை. பிரிவினை வந்த பின்னும் நாட்டடிப்படையான இனப்பற்று இல்லாமல் ஒற்றுமையுணர்ச்சி வளர முடியாது.