பக்கம்:அப்பாத்துரையம் 3.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 3

(146) || மூவாப் பண்பையே இந்த அடைமொழிகளின் கவிதை மெய்ம்மை குறித்துக் காட்டும்.

கால இடங் கடந்த கடவுட் பண்பெல்லையிலிருந்து மொழிவாழ்வுக்கு மனித வாழ்வு அனுப்பித்தரும் இப் படிப்பினைகளுள் சிலவற்றை நம் வரலாற்றுக் கால உலகளாவிய செய்திகள் மூலமே இங்கே துருவிக் காண்போம்.

மொழிகள் பல. பலநூறு, பல ஆயிரம் மொழிகள் நம் உலகின் ஐந்து மாகண்டங்களிலும் நிலவுகின்றன. ஆயினும், மனித இனம் மனித நாகரிகம் ஒன்றுதான். அதனைப் பல்வேறு னங்களாக, பல்வேறுபட்ட பண்புகளும் நாகரிகங்களும் உடையதாகத் தோற்றுவிக்கக் காரணமாயிருப்பது மொழிதான். மொழியின் இந்த வேறுபடுத்தும் பிரிவினைப் பண்பை யாவரும் அறிவர். ஆனால், அதன் ஒன்றுபடுத்தும் அடிப்படைப் பண்பை அறிபவர் மிக மிகச் சிலர். மொழி நூலார்கூட, தம்மையறி யாமலேதான், இந்த உண்மையைக் காணத் தொடங்கி யுள்ளனர்; இந்த உண்மையின் திசை நோக்கியே மொழியாராய்ச்சிகள், மொழி ஓப்பீட்டாராய்ச்சிகள், இலக்கியம் - கலை ஒப்பீட் டாராய்ச்சிகள், சமயம் -பண்பாட்டு ஒப்பீட்டாராய்ச்சிகள் சென்றுகொண்டிருக்கின்றன.

மொழி மனித இனங்களை ஆக்குவது மட்டுமன்று, மனித இனத்தை ஆட்டுவதும் அதுவே. மொழி இல்லாவிட்டால் னங்களல்ல, இனமே தோன்றி யிராது. தன்னினம் அறிந்து பிற

னங்களுக்கும் இனம் சுட்டிக்காட்டும் இனமாக மனிதன் விளங்கியிருக்கமாட்டான். உயிர்ப் பெரும் பேரினத்துக்கு மனித இனம் செய்துவரும் இதே சேவையைத்தான், மனிதப் பேரினத்துக்குத் தமிழினம் செய்து வந்திருக்கிறது, செய்ய- இருக்கிறது. மனித இனத்தைப் பல இனங்களாகப் பெருக்கிய, பேரினமாக்கிய தமிழன், தான் ஓர் இனம் என்பதையே இன்று உணராததால், மனிதப் பேரினத்துடன் தனக்குள்ள தொடர்பை மறந்து, அப் பேரினத்துக்குத் தான் ஆற்ற வேண்டிய கடமையிலும் பொறுப்பிலும் பெரிதும் தவறி தட்டுக் கெட்டுத் தடுமாறுகிறான்.

மொழி உண்மையில் மனிதப் பேரினமளாவியது மட்டுமன்று. அது கடந்து உயிர்ப்பெரும் பேரினத்தையே அளாவி வளர்வது. மனிதர் ஒரு மொழி தெரியாமலே, அதன்