152
அப்பாத்துரையம் - 3
செய்யுளில் ஊடாடும் சொற்களும் இன மக்கள் நீடித்த பேச்சு வழக்கில் படிவதில்லை.
சி
ஒரு மொழியின் சொற்களுக்கு உயிர் உண்டு. மொழியில் ஒரு சொல் ‘எத்தனை தடவை' வழங்குகின்றன என்பதைப் பொறுத்தது அதன் உயிர். இதை உணர்ந்தே மேலை நாட்டினர் 'சொற் பழக்க' அகர வரிசை (பிரிக்குவன்சி டிக்ச்னரிஸ்)யாத்து வருகின்றனர். ஆனால், உண்மையில் மொழியில் சொல்லின் குழு உயிரும் சிறப்பும் அது ‘எத்தனை தடவை, எத்தனை பேரால், எத்தனை நீண்ட காலம் பயின்று பழகி வழங்கிவருகிறது என்பதைப் பொறுத்தது.
சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர் மறைமலை யடிகளைப் போலத் தெரிந்தோ, அல்லது கம்பர் முதலிய இயற்கைக் கவிஞர்களைப் போலத் தெரியாத நிலையிலேயோ உயிர்ச் சொற்களையே கையாண்டு தம்மொழிக்கு மாயக்கலைப் பண்பை மந்திர ஆற்றலை உண்டு பண்ணியுள்ளனர்.
கிரேக்க இலத்தீன் மொழிகள் தம்மைச் சூழ்ந்து நிலவிய செமித்திய இனத்தவரிடமிருந்தும், செமித்தியர் தமக்கு முன் வாழ்ந்த சுமேரிய ஈலமியரிட மிருந்துமே மொழி, கலை, பண்பு, நாகரிகம் இரவல் பெற்று, இரவல் தொடர்பு மறைத்து வாழ்ந்தனர், அத்தனை பேரும் மாண்ட னத்தின் மரபில் பட்டதன் மறைதிறவு இதுவே.
தமிழ்க்கு அருகே நீடித்து வாழ்ந்த சமற்கிருதம் மற்ற மொழிகளைத் தாண்டி நெடுநாள் கலை வாழ்வுற்றது. ஆயினும், அதன் சரக்குகள் முற்றிலும் இரவல் சரக்குகள் என்பதை நாம் மறந்தாலும் இயற்கை மறவாமல் காட்டியுள்ளது. அதில் இலக்கியம் தோன்று முன்பே மொழி மாண்டது. அது மட்டுமன்று! இரவல் பெற்றதைத் தனதெனக் கூறி இரவல் கொடுக்கத் தொடங்கும் செல்வன், தான் அழிவதுடன் இரவல் வாங்குபவனையும் அழித்துவிடுதல் எவரும் அறியும் செய்தியே யாகும். சமற்கிருதம் தன் சரக்கென்று தன் சொல்வளத்தையும் இலக்கிய வளத்தையும் தாய்மொழிகளுக்கு வழங்கத் தொடங்கிய தால் தன் இலக்கிய உயிர்ப்பும் இழந்தது.