+
அப்பாத்துரையம் - 3
212) || என்றால் தவறில்லை. அவ்வளவு பழங்காலத்திலே, கி.மு.600-க்கு முற்பட்ட நாகரிக உலகம் என்பது இன்றையஅல்லது இடைக் கால உள்நாட்டு நாகரிகங்களன்று; ஒரு கடல் சார்ந்த கடற் கரையோர நாகரிகமே யாகும். அது தமிழகத்திலிருந்தும் கீழ்க்கோடியில் சப்பான் வரைக்கும் மேற்கே ஆப்பிரிக்காக் கரையில் மடகாஸ்கர் வரைக்கும் ஜிப்ரால்ட்டர் வரைக்கும் தென் ஐரோப்பாவில் பிரிட்டன் வரைக்கும் இவற்றுக்கப்பால் நடு அமெரிக்கா வரைக்கும் பரவியிருந்தது. சமய மூல முதல் நூல் மரபின் மூலமரபை இவற்றினிடையே, இவற்றின் உயிர் மய்யமான ஒரு பண்டைப் பழம் பண்பட்ட தேசிய நாகரிகத்திலேயே நாம் தேடுதல் வேண்டும்.
இம்மூல முதல் நூல் மரபு தமிழகத்தை அணுகிவருந் தோறும் சில தனிச் சிறப்புகளைக் காண்கிறோம்.
1. யூதர் சமயம் மிக மிகப் பழைமை வாய்ந்தது. கி.மு. 600-க்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டது. ஆனால், அச்சமயச் சார்பான திரு எழுத்துத் தொகுதி (தால்முட்) நாளடைவில் திரட்டப்பட்டதே தவிர, மற்றபடி, அச்சமயத்துக்குத் தொடக்கத்திலிருந்தே ஒரு மூல முதல் நூல் கிடையாது. யூத சமயத்துக்கு அடுத்தபடியான இரண்டாந்தரப் பழைமையை யுடையது புத்த சமயம். ஆனால், அதற்கு ஒரு மூல முதல்வர் உண்டு (புத்தர் பிரான்). ஒரு மூல முதல் நூலும் உண்டு (பிடகம்). இம் மூல முதல் நூலும் ஒன்றல்ல. மூன்றிணைந்த தொகுதி. மூன்று வேதம், நான்கு வேதம் என்ற இந்திய மரபினை இது நினைவூட்டுவதா யுள்ளது.
2.
மூல முதல்நூல் மரபைவிட வேதமரபு பழைமை வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. பாரசிக ஆரியரின் அவெஸ்தாவும், இந்திய ஆரியரின் இருக்கு வேதமும் இரண்டுமே கி.மு.1500-க்கும், கி.மு. 800-க்கும் இடைப்பட்டவை என்று ஆரிய இன ஆராய்ச்சியாளரால் கருதப்படுகிறது. 'வேதம்' என்ற சொல்லின் வேர் மூலமும் 'அறிவு' என்ற பொருளுடைய ‘வித்' என்ற ஆரிய இனச்சொற் பகுதியே என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
ஆரியர்-இந்தியர் வேதமரபு பற்றிய கீழ்வரும் வரலாற்று விளக்கச் செய்திகள் கவனிக்கத்தக்கவை.